Latest News

May 20, 2016

4 இலட்சம் பேர் நிர்க்கதியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக உயர்வு ; தொடர்ந்து அதி­க­ரிக்கும் வெள்ளம்
by admin - 0

சீரற்ற கால­நி­லை­யினால் ஏற்­பட்­டுள்ள வெள்ளப்­பெ­ருக்கு மற்றும்
மண்­ ச­ரி­வு­க­ளினால் மக்­களின் அவல நிலைமை தொடர்ந்து அதி­க­ரித்த
வண்­ண­முள்­ளது. 

மழை வீழ்ச்சி குறை­வாக பதி­வான போதிலும் வெள்ளப் பெருக்கு ஏற்­பட்ட இடங்­களில் நீர் இன்­னமும் வடிந்­தோ­ட­வில்லை. இந்­நி­லையில் நேற்றைய தினம் வரை 98 ஆயி­ரத்து 76 குடும்­பங்­களை சேர்ந்த 4 இலட்­சத்து 14 ஆயி­ரத்து 627 பேர் மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன் உயி­ரி­ழப்­புகள் எண்­ணிக்கை 56 பேர் வரை அதி­க­ரித்­துள்­ளன. மேலும் 134 க்கும் மேற்­பட்­டோரை காண­வில்லை. 3 இலட்­சத்து 6 ஆயி­ரத்து 773 க்கும் அதி­க­மானோர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

இதன்­பி­ர­காரம் இடம்­பெ­யந்­துள்ள 61 ஆயி­ரத்து 382 குடும்­பங்கள் சுமார் 594 முகாம்­களில் பாது­காப்­பாக தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் மண்­ச­ரிவு , வௌ்ளபெ­ருக்கு மற்றும் காற்­றினால் 3200 வீடுகள் முழு­மை­யாக சேத­ம­டைந்­துள்­ள­தாக அனர்த்­தக முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ளது.
இதே­வேளை அர­நா­யக்க மற்றும் புலத் கொஹு­பிட்­டிய போன்ற பிர­தே­சங்­களில் ஏற்­பட்ட மண்­ச­ரி­வினால் பாரிய சேதம் ஏற்­பட்­டி­ருந்­தது. மண்­ச­ரிவில் மூன்று கிரா­மங்கள் முழு­மை­யாக புதை­யுண்­டன. இதன்­கா­ர­ண­மாக 150 பேர் காண­வில்லை. 27 பேரின் சட­லங்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. நேற்­றைய தினத்தின் அதிக மழை பொழிவின் கார­ண­மாக மீட்பு பணிகள் மந்த நிலை­மையில் காணப்­ப­டு­வ­தாக இரா­ணுவம் அறி­வித்­துள்­ளது
இதே­வேளை நேற்­றைய தினத்தின் போதும் களனி கங்­கையின் நீர் மட்டம் அதி­க­ரித்­தி­ருந்­தது. குறிப்­பாக மலை­யக பிர­தே­சங்­களில் பொழி­கின்ற மழை நீர் அனைத்தும் களனி கங்­கைக்கே ஒன்று சேரு­வதன் விளை­வாக களனி கங்­கையின் நீர் மட்டம் அதி­க­ரித்­தது. இதனால் களனி , நவ­கம்­புர, வெல்­லம்­பிட்டி, அவி­சா­வளை, ஹங்­வெல்ல மற்றும் பேலி­ய­கொட ஆகிய பகு­தி­க­ளுக்கே பாதிப்­புகள் ஏற்­பட்­டன.
வெல்­லம்­பிட்டி, களனி, அவி­சா­வளை உள்­ளிட்ட பகு­தி­களில் நீர் வடிந்­தோ­டா­ததன் கார­ண­மாக மக்கள் பெரும் சிர­மங்­களை எதிர்­கொண்­டனர்.

களனி பிர­தே­சத்தில் வௌ்ளம் பெருக்கின் கார­ண­மாக தொட­லங்க மற்றும் கொழும்பு கண்டி வீதியின் போக்­கு­வ­ரத்தில் பெரும் பாதிப்பு ஏற்­பட்­டி­ருந்­தது. களினி பகு­தியின் வௌ்ளபெ­ருக்கு கார­ண­மாக கட்­டு­நா­யக அதி­வேக பாதை பேலி­ய­கொடை பிர­தான நுழை­வா­யி­லுக்கு அருகில் பாரிய வாகன நெரிசல் காணப்­பட்­டது.

அத்­துடன் சீரற்ற கால­நிலை கார­ண­மாக கல்வி நட­வ­டிக்கை முழு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­பி­ர­காரம் இன்­றைய தினம் நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள அனைத்து பாட­சா­லை­க­ளுக்கும் விடு­முறை தின­மாக அர­சாங்­கத்­தினால் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

மேலும் கட­லோர பிர­சே­தங்­க­ளுக்­கான வளி­மண்­ட­வியல் திணைக்­க­ளத்தின் எச்­ச­ரிக்கை தொடர்ந்தும் நீடிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக வடக்கு உள்­ளிட்ட கட­லோர பகு­தி­களில் கடு­மை­யான காற்று வீசும் என திணைக்­களம் அறி­வித்­தி­ருந்­தது. மேலும் 8 மாவட்­டங்­க­ளுக்­காக மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்­கையும் நேற்று நீடிக்­கப்­பட்­டி­ருந்­தது.
கொழும்பு மாவட்டம்
இடை­வி­டாது தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை கார­ண­மாக களனி கங்­கையின் நீர் மட்டம் அதி­க­ரிக்க தொடங்­கி­ய­தனை அடுத்து கொழும்பில் வௌ்ளப்­பெ­ருக்கு ஏற்­பட்ட பிர­தே­சங்­களின் நீர் மட்டம் பன்­ம­டங்கு அதி­க­ரித்­துள்­ளது. இதன்­பி­ர­காரம் கொழும்பு நகரின் வெல்­லம்­பிட்­டிய , கொலன்­னாவை உள்­ளிட்ட பிர­சே­தங்­க­ளி­லி­ருந்து நேற்­றைய தினமும் மக்கள் தொடர்ந்து வெளி­யே­றி­வ­ரு­கின்­றனர். இருந்­த­போ­திலும் 200 குடும்­பங்கள் வௌ்ளத்தில் சிக்­குண்டு பாது­காப்­ப­தற்கு எவ­ரு­மின்றி தத்­த­ளித்­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இது­வ­ரைக்கும் கொழும்பு நகரில் வெல்­லம்­பிட்­டிய மற்றும் கொலன்­னாவை பிர­சே­தங்­களே அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டன.

குறித்த பிர­சே­தங்­களில் மாத்­திரம் 18 ஆயி­ரத்து 756 குடும்­பங்­களை சேர்ந்த சுமார் 94 ஆயி­ரத்து 151 பேர் 16 முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். இதன்­பி­ர­காரம் கொழும்பு மாவட்­டத்தில் மாத்­திரம் 35ஆயி­ரத்து 839 குடும்­பங்­களை சேர்­நத 1 இலட்­சத்து 70 ஆயி­ரத்து230 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் 35 ஆயி­ரத்து 725 குடும்­பங்­களை சேர்ந்த 1 இலட்­சத்து 70ஆயி­ரத்து 403 பேர் இடம்­பெ­யர்ந்து 64 முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

கம்­பஹா , களுத்­துறை
இதே­வேளை கம்­பஹா மாவட்­டத்தில் 29 ஆயி­ரத்து 732குடும்­பங்­களை சேர்ந்த ஒரு இலட்­சத்து 22 ஆயி­ரத்து 232 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். கள­னியில் மாத்­திரம் 28 ஆயி­ரத்து 178 பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். களுத்­துறை மாவட்­டத்தில் 9240 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

கேகாலை ,இரத்­தி­ன­புரி
கேகாலை மாவட்­டத்தில் 12 ஆயி­ரத்து 757 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 2737 பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.மேலும் கேகா­லையில் இது­வ­ரைக்கும் 30 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். 150க்கு மேற்­பட்டோர் காணாமல் போயுள்­ளனர்
இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் கடும் காற்று , மழை கார­ண­மாக 2859 குடும்­பங்­களை சேர்ந்த 11ஆயி­ரத்து 232 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் 6449 பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

மலை­யகம்
நாட்டின் ஏனைய பகு­தி­களை விடவும் நேற்­றைய தினம் மலை­ய­கத்தில் கடும் மழை பெய்­தது. இதன்­கா­ர­ண­மாக பல பிர­சே­தங்கள் நீரில் மூழ்­கி­ய­துடன் மண்­ச­ரிவு அனர்த்தம் பல இடங்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருந்­தது. குறிப்­பாக நேற்று முன் தினம் கண்டி மாவட்­டத்தில் கடு­கண்­ணாவ பிர­தேத்தில் பாரிய மண்­ச­ரிவு அனர்த்தம் ஏற்­பட்­டி­ருந்­தது. இதனால் ஆறு பேர் மண்­ச­ரிவில் சிக்­குண்­டனர். அதே­போன்று தெல்­தொடை, நாவ­லப்­பிட்­டிய, கல­கெ­தர போன்ற பிர­தே­சங்­களில் மண்­ச­ரிவு ஏற்­பட்­டது.
மேலும் நுவ­ரே­லியா மாவட்­டத்தில் 754 குடும்­பங்­களை சேர்ந்த 3132 பேர் மண்­ச­ரிவு கார­ண­மாக இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். அத்­துடன் மாத்­தளை மாவட்­டத்தில் பாதிப்பு குறை­வா­கவே பதி­வா­கி­யுள்­ளது.
வடக்கு ,கிழக்கு
வடக்கு மாகா­ணத்தில் மாத்­திரம் 11 ஆயி­ரத்து 171 குடும்­பங்­களை சேர்ந்த 37 ஆயி­ரத்து 550 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இதன்­பி­ர­காரம் வடக்கில் கிளி­நொச்சி மாவட்­டத்­தி­லேயே மிகவும் மோச­மான பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. இதன்­பி­ர­காரம் 5464 குடும்­பங்­களை சேர்ந்த 18 ஆயி­ரத்து 265 பேர் பாதிப்­ப­டைந்து 1163 பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். யாழ்ப்­பா­ணத்தில் மாத்­திரம் ஆயி­ரத்து 572 குடும்­பங்­களை சேர்ந்த 6 ஆயிரம் பேர் வௌ்ள பெருக்­கினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். யாழ் நக­ரி­லேயே அதி­க­ளவில் பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன.
இதே­வேளை வவு­னியா மாவட்­டத்தில் 1100 குடும்­பங்­களை சேர்ந்த 4 ஆயி­ரத்து 127 பேர் வௌ்ளத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 32 வீடுகள் சேத­ம­டைந்­துள்­ளன. அத்­துடன் மன்னார் மாவட்­டத்தில் 1488 குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் முல்­லை­தீவு மாவட்­டத்தில் 1458 குடும்­பங்­களை சேர்ந்த 4000 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் கிளி­நொச்­சி­யிலும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவிவருகின்றது.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் போன்ற பிரசேதங்களில் மீன்பிடி துறைகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக படகுகளும் சேதமடைந்துள்ளன.

கிழக்கு மாகாணத்தில் குறைந்தளவிலான பாதிப்புகளே பதிவாகியுள்ளன. இருந்தபோதிலும் திருகோணமலை மாவட்டத்தில் 14 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 18 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

குருநாகல் , புத்தளம்
வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்திற்கே அதிகளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 8906 குடும்பங்களை சேர்ந்த 33 ஆயிரம் 788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் 2000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments