Latest News

March 28, 2016

தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் படு­கொலை குறித்து உரிய விசா­ரணை வேண்டும்
by admin - 0

கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட தமிழ் ஊட­க­வியலா­ளர்கள் மீதான படு­கொ­லைகள், ஊடக நிறு­வ­னங்கள் மீதான தாக்­கு­தல்கள், வன்­மு­றைகள் குறித்து உரிய விசா­ரணை நடத்­தப்­பட­வில்லை என்ற குற்­றச்­சாட்டு தற்­போது மேலெ­ழுந்து வரு­கின்­றது. 2015 ஆம் ஆண்டில் ஜன­வரி மாதம் 8 ஆம் திக­தி­ இடம்பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது எதி­ர­ணியின் வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­பெற்­ற­தை­ய­டுத்து புதிய அர­சாங்கம் பத­வி­யேற்­றி­ருந்­தது. இத­னை­ய­டுத்து இடம்­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்கம் மீண்டும் பத­விக்கு வந்­தது.

இவ்­வாறு புதிய அர­சாங்கம் பத­வி­யேற்று ஒரு வரு­டம் ஆகி­விட்­ட­போ­திலும் படு­கொலை செய்­யப்­பட்ட தமிழ் ஊட­க­வி­யலாளர்கள் தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் இன்­னமும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இதேபோல் ஊட­க­ நி­று­வ­னங்கள் மீதான தாக்­கு­தல்கள் குறித்தும் உரிய வகையில் விசா­ரிக்­கப்­ப­ட­வில்லை. படு­கொலை செய்­யப்­பட்ட மற்றும் வன்­மு­றைக்கு உள்­ளான தமிழ் ஊட­க­வியலா­ளர்­களின் குடும்­பங்­க­ளுக்கு உரிய நஷ்­ட­ஈ­டு­களும் வழங்­கப்­ப­டாத நிலைமை தொடர்ந்து வரு­கின்­றது.

தென்­ப­கு­தியில் படு­கொலை செய்­யப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ள­ரான லசந்த விக்­கி­ர­ம­துங்க மற்றும் கடத்­தப்­பட்டு காணாமல் போய் படு­கொலை­ செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­படும் பிரகீத் எக்­னெ­லி­கொட ஆகியோர் தொடர்பில் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்த சம்­பவம் தொடர்பில் பலர் கைதுசெய்­யப்­பட்டு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. உண்­மை­யி­லேயே இந்த ஊட­க­வி­யலா­ளர்­களின் படு­கொலை தொடர்பில் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றமை வர­வேற்­கத்­தக்க நட­வ­டிக்­கை­யே­யாகும். இதேபோல் கொல்­லப்­பட்ட தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் தொடர்­பிலும் ஊடக நிறு­வ­னங்கள் மீதான தாக்­கு­தல்கள் குறித்தும் உரிய விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதே தமிழ் மக்­க­ளி­னதும் தமிழ் ஊட­கத்­து­றை­யி­ன­ரதும் வேண்­டு­கோ­ளாக இருந்துவரு­கின்­றது.

நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து தமிழ் ஊட­கத் துறை­மீ­தான தாக்­கு­தல்கள், வன்­மு­றைகள் குறித்து உரிய விசா­ரணை நடை­பெறும் என்று பெரும் எதிர்­பார்ப்பு நில­வி­வந்­தது. ஆனால் ஒரு வரு­டம் கடந்துவிட்ட நிலை­யிலும் இத்­த­கைய விசா­ர­ணைகள் இடம்­பெ­றாமை பெரும் ஏமாற்றம் தரும் செயற்­ப­ாடாக மாறி­யுள்­ளது.


2000 ஆம் ஆண்டில் யாழ்ப்­பா­ணத்தில் ஊட­க­வி­ய­லாளர் மயில்­வா­கனம் நிம­ல­ராஜன் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டி­ருந்தார். இவ­ரது படு­கொலை தொடர்பில் அப்­போது விசா­ர­ணைகள் நடை­பெற்­ற­போ­திலும் இது­வரை எவரும் தண்­டிக்­கப்­ப­ட­வில்லை. இதேபோல் சிரேஷ்ட ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான டி. சிவராம் கொழும்பில் கடத்திச்செல்­லப்­பட்டு சுட்­டுக்­கொல்­லப்­பட்டார். மட்­டக்­க­ளப்பில் ஊட­க­வி­ய­லா­ள­ரான நடேசன் நடுத்­தெ­ருவில் வைத்து சுட்­டுக்­கொல்­லப்­பட்­டி­ருந்தார். 2006 ஆம் ஆண்டு திரு­கோ­ண­ம­லையில் ஊட­க­வி­ய­லாளர் சுகிர்­த­ராஜன் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார். யாழ்ப்­பா­ணத்தில் ஊட­க­வி­ய­லாளர் ரஜி­வர்மன் மற்றும் யாழ். பல்­க­லைக்­க­ழக ஊட­கத்­துறை மாணவன் நிலக் ஷன் ஆகியோர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டனர்.

இவ்­வாறு தமிழ் ஊட­கத்­து­றையைச் சேர்ந்த ஊட­க­வி­யலா­ளர்­களும் ஊட­கத்­துறை ஊழி­யர்­களும் அடுக்­க­டுக்­காக சுட்­டுக்­கொல்­லப்­பட்­டி­ருந்­தனர்.
யாழ்ப்­பா­ணத்தில் 2006 ஆம் ஆண்டு உதயன் பத்­தி­ரிகை வளா­கத்­திற்குள் பிர­வே­சித்த ஆயு­த­தா­ரிகள் நிறு­வ­னத்தில் பணி­பு­ரிந்­து­கொண்­டி­ருந்த ஊட­கப்­ப­ணி­யா­ளர்­களை சுட்­டுக்­கொலை செய்­த­துடன் தாக்­கு­தலும் நடத்­தி­யி­ருந்­தனர். இத­னை­விட இந்தப் பத்­தி­ரி­கையின் செய்தி ஆசி­ரியர் குக­நாதன் மீதும் பத்­தி­ரிகை விநி­யோக ஊழி­யர்கள் மீதும் தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது.

இதேபோல் ஊடக நிறு­வ­னங்கள் மீதும் ஊட­க­வி­யலா­ளர்கள் மீதும் வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டி­ருந்­தன. இந்த காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான நட­வ­டிக்­கைகள் குறித்து விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு குற்­ற­வாளிகள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­டு­வார்கள் என்று எதிர்­பார்க்­கப்­பட்­ட­போ­திலும் கடந்த அர­சாங்க காலத்தில் அதற்­கான நட­வ­டிக்­கைகள் எவையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

வேலியே பயிரை மேயும் சம்­ப­வங்கள் தொடர்ந்­த­னவே தவிர, அதனைத் தடுத்து நிறுத்­து­வ­தற்­கான செயற்­பா­டுகள் எவையும் இடம்­பெ­ற­வில்லை. ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீதான படு­கொ­லைகள், தாக்­கு­தல்­களை அடுத்து பெரு­ம­ள­வான ஊட­க­வி­ய­லா­ளர்கள் உயிரச்­சு­றுத்தல் கார­ண­மாக வெளி­நா­டு­க­ளுக்கு புலம்­பெ­யரும் நிலையும் ஏற்­பட்­டது. இவ்­வா­றான ஊடக அச்­சு­றுத்­தல்கள் தொடர்ந்த நிலை­யிலும் ஊட­கத்­துறை சுதந்­தி­ரத்­திற்­காக அன்றும் உயிரச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தியில் தமிழ், சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்கள் களத்தில் நின்று போரா­டி­னார்கள்.

அன்று சுதந்­திர ஊடக இயக்­கத்­துடன் உழைக்கும் பத்­தி­ரி­கை­யாளர் சங்கம், தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஒன்­றியம், முஸ்லிம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஒன்­றியம் உட்­பட ஏழு சங்­கங்கள் ஒன்­றி­ணைந்து செயற்­பட்டு ஊடக அடக்­கு­மு­றைக்கு எதி­ராகக் குரல்­கொ­டுத்து வந்­தன. ஊட­க­வி­யலா­ளர்கள் கடத்­தப்­பட்­ட­போதும் படு­கொலை செய்­யப்­பட்­ட­போதும் இந்த சங்­கங்­களைச் சேர்ந்த உறுப்­பி­னர்கள் துணிந்து நின்று போராட்­டங்­களை நடத்­தினர். வடக்கு, கிழக்­குப் ­ப­கு­தி­க­ளுக்குச் சென்றும் போராட்­டங்கள் நடத்­தப்­பட்­டன.

அப்­போது அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தியில் ஒன்­றி­ணைந்து ஊடக சுதந்­தி­ரத்­திற்­காகப் போரா­டிய அமைப்­புக்கள் இன்று புதிய அர­சாங்கம் பத­வி­யேற்­றுள்ள நிலையில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திகள் தொடர்பில் நியாயம் கிடைக்க வேண்­டு­மென்று வலி­யு­றுத்தி வரு­கின்­றன. தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் படு­கொலை தொடர்பில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட ­வேண்­டு­மென்றும் இந்த ஊடக அமைப்­புக்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

அண்­மையில் ஊடக அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார். இந்த சந்­திப்பின் போது படு­கொலை செய்­யப்­பட்ட தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்றும் தற்­போதும் தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் படைத்­த­ரப்­பி­னரால் அச்­சு­றுத்­தல்­களை எதிர்­நோக்கி வரு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது. லசந்த விக்­கி­ர­ம­துங்க, பிரகீத் எக்­னெ­லி­கொட ஆகி­யோரின் படு­கொ­லைகள் தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­டு­வ­தைப்­போன்று தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் படு­கொலை தொடர்­பிலும் விசா­ரிக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் இங்கு வலி­யு­றுத்­தப்­பட்­டது.

இதற்குப் பதி­ல­ளித்த பிர­தமர் இவ்­வி­டயம் குறித்து நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென்றும் தற்­போது படு­கொலை செய்­யப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம், நட­ராஜா ரவிராஜ் ஆகி­யோரின் கொலை தொடர்பில் விசா­ர­ணைகள் நடை­பெ­று­வ­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் படு­கொலை தொடர்பில் விசா­ரணை இடம்­பெ­று­வ­தைப்­போன்று தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கொலைகள் தொடர்­பிலும் விசா­ரிக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதே தமிழ் ஊட­கத்­து­றை­யி­னரின் கோரிக்­கை­யாக இருக்­கின்­றது.
ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக மற்றும் பிரதி அமைச்சர் கரு­ணா­ரத்ன பர­ண­வி­தா­ரண ஆகியோர் தலை­மையில் தெற்கைச் சேர்ந்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் குழு­வொன்று நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­துள்­ளது. தெற்கு ஊடக சகோ­த­ரத்­து­வத்­தையும் வடக்கு ஊடக சகோ­த­ரத்­து­வத்­தையும் ஒன்­றாக இணைக்கும் நல்­லி­ணக்கப் பய­ண­மா­கவே இந்த குழு­வினர் அங்கு சென்­றுள்­ளனர்.
இக்­கு­ழு­வினர் யாழ்ப்­பா­ணத்தில் வட­மா­காண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் படைத்­த­ள­ப­திகள் ஆகி­யோ­ரையும் மதத்­த­லை­வர்­க­ளையும் சந்­தித்­துள்­ளனர். ஊடக நிறு­வ­னங்­க­ளையும் பார்­வை­யிட்­டுள்ள இவர்கள் படு­கொலை செய்­யப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­களின் குடும்­பங்­க­ளையும் சந்­திக்­க­வுள்­ள­தாக தெரி­கின்­றது. உண்­மை­யி­லேயே வடக்கு, தெற்கு ஊட­க­வி­யலா­ளர்கள் மத்­தியில் சகோ­த­ரத்­து­வத்தை ஏற்­ப­டுத்­து­வது வர­வேற்­கத்­தக்க செயற்­பா­டே­யாகும்.
வடக்கு, தெற்கு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளி­டையே புரிந்­து­ணர்வு ஏற்­ப­டு­வது என்­பது நல்­ல­தொரு விட­ய­மாகும். ஆனால் இவ்­வா­றான புரிந்­து­ணர்வு ஏற்­ப­ட­வேண்­டு­மானால் படு­கொலை செய்­யப்­பட்ட தமிழ் ஊட­க­வி­யலா­ளர்கள் தொடர்­பிலும் ஊட­க­ ­நி­று­வ­னங்கள் மீதான தாக்­குதல் தொடர்­பிலும் உரிய விசா­ரணை நடத்­தப்­பட்டு நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வேண்டும். குற்­ற­மி­ழைத்­த­வர்கள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்டும்.

படு­கொலை செய்­யப்­பட்ட தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளது குடும்­பங்­க­ளுக்கு இது­வரை நஷ்­ட­ஈ­டுகள் எதுவும் வழங்­கப்­ப­ட­வில்லை. இதனால் அந்தக் குடும்­பங்கள் வாழ்­வா­தார உத­விகள் இன்றி கஷ்­டப்­பட்டு வரு­கின்­றன.

இழைக்­கப்­பட்ட அநீ­திகள் குறித்து விசா­ர­ணை­களை நடத்­து­வ­துடன் பாதிக்­கப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­களின் குடும்­பங்­க­ளுக்கும் நஷ்­ட­ ஈ­டுகள் வழங்­கப்­ப­ட­வேண்டும். தற்­போது கடந்த ஆட்சிக் காலத்தில் பாதிக்­கப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­களின் விப­ரங்­களை ஜனா­தி­பதி செய­லகம் கோரி­யி­ருக்­கி­றது. இந்த விப­ரங்­களைப் பெற்று அந்த ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு அர­சாங்­க­மா­னது உத­வி­களை செய்­ய­வேண்டும். இதன் மூலமே வடக்கு, தெற்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை கட்டியெழுப்பலாம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
« PREV
NEXT »

No comments