Latest News

March 10, 2016

ஒற்றையாட்சியில் அதிகாரப்பகிர்வு மாகாண சபைகளுக்கு மேலதிக அதிகாரங்கள் என்கிறார்-ரணில்
by admin - 0

ஒற்­றை­யாட்­சிக்குள் நாட்டுக்கு அச்­சு­றுத்­தல்­களை ஏற்­ப­டுத்­தாத வகையில் தற்­போ­தைய அதி­கா­ரங்­க­ளை­விட மேல­திக அதி­கா­ரங்­களை
மாகாண சபைகளுக்கு வழங்­கு­வது தொடர் பில் ஐந்து முத­ல­மைச்­சர்­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டுள்­ள­தாக நேற்று சபையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரிவித்தார்.

தேர்தல் முறைமை மாற்றம் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­குள்­ளேயே கொண்­டு­வ­ரப்­படும் என்றும் பிர­தமர் கூறி னார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பாக அர­சி­ய­ல­மைப்பு பேரவையை உருவாக்கும் தீர்­மா­னம் மீதான இறு­திநாள் விவா­தத்தில் கலந்துகொண்டு உரை­யாற்றுகையிலேயே
பிர­தமர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

பிர­தமர் சபையில் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், புதிய அர­சி­ய­ல­மைப்பை ஏற்­ப­டுத்தவும் வடக்கு, கிழக்கு, தெற்கு உட்­பட அனைத்துப் பிர­தே­சங்­க­ளிலும் அடிப்­படை வாதத்­தினை ஒழிப்­ப­தற்கே மக்கள் அர­சுக்கு ஆத­ரவு வழங்­கினர். 1972 ஆம் ஆண்டு குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை மூலம் நிறை­வேற்­றப்­பட்­டது. அதே­போன்று 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பும் நிறை­வேற்­றப்­பட்­டது. ஆனால் அதன்­போ­தெல்லாம் மக்கள் கருத்­துக்கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. கடந்த காலத்தில் 18 ஆவது திருத்தம் நிறை­வேற்­றப்­பட்­டது. இதனை மக்கள் நிரா­க­ரித்­தார்கள்.

கடந்த காலங்­க­ளை­விட இன்று புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் சபைக்குள் விவா­திக்கும் நிலை முதன்­மு­த­லாக ஏற்­பட்­டுள்­ளது. அத்­துடன் பொது­மக்­களின் கருத்­துக்­களும் பெற்றுக் கொள்­ளப்­ப­டு­கின்­றன.

புதிய அர­சி­ய­ல­மைப்­பினால் நாட்டில் அனைத்துப் பிரச்­சி­னை­களும் தீரப்­போ­வ­தில்லை. ஆனால் பிரச்­சி­னை­களை தீர்த்துக் கொள்­வ­தற்­கான அடித்­தளம் இதன்­மூலம் இடப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் தேசிய அரசு புதிய மூலோ­பா­யங்­க­ளுடன் இதனை முன்­னெ­டுக்­கின்­றது. இதற்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் ஆத­ரவும் கிடைத்­துள்­ளது.
19 ஆவது திருத்­தத்தை கொண்­டு­வந்து நிறை­வேற்று அதி­கா­ரங்­களை குறைத்து பாரா­ளு­மன்ற அதி­கா­ரங்­களை பலப்­ப­டுத்­தினோம். இன்று மக்­களின் கருத்­துக்­க­ளுக்­க­மைய புதிய அர­சி­ய­ல­மைப்பு ஏற்­ப­டுத்­தப்படவுள்ளது. பாரா­ளு­மன்­றத்தில் இன்று பிர­த­மர் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கிறார். தெரி­வுக்­கு­ழுக்கள் தொடர்­பாக புதிய சம்­பி­ர­தா­யங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக மக்­களின் கருத்­துக்­களை அறிய நிய­மித்த குழு ஏப்ரல் மாதம் தனது அறிக்­கையை சமர்ப்ப்­பிக்கும். தேர்தல் முறை மாற்றம் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­குள்­ளேயே உள்­ள­டக்­கப்­படும்.

 இது தொடர்பில் பிர­தான இரண்டு கட்­சிகள் மட்டுமல்ல எதிர்க்­கட்சித் தலைவர் மற்றும் சிறு கட்­சி­க­ளின் பிரதிநிதிகளுடனும் ஆலோ­ச­னைகள் நடத்­தப்­படும். யோச­னைகளும் பெற்றுக் கொள்­ளப்­படும்.

சிறு­பான்­மை­யின கட்­சிகள், சிறிய கட்­சி­களின் பிர­தி­நி­தித்­துவங்கள் பாதிக்­கப்­ப­டாத வகையில் அனைத்தும் முன்­னெ­டுக்­கப்­படும், மத்­திய அர­சாங்கம், மாகாண சபைகள், பிர­தேச சபைகள் அனைத்தும் கிரா­மங்­களில் தமது அர­சியல் அதி­கா­ரத்­தையும், அபி­வி­ருத்­தி­க­ளையும் மேற்­கொள்ள முயற்­சிக்­கின்­றன. இதனால் வீண் விர­யங்கள் ஏற்­ப­டு­கின்­றன. இதனை தவிர்ப்போம்.

ஒற்­றை­யாட்­சிக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் 5 முதலமைச்சர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக விரிவாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த ஆட்சிக் காலத்தில் புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்த முடியாமல் போனால் ஒருபோதும் நடைபெறமாட்டாது என்றார்.
« PREV
NEXT »

No comments