Latest News

January 26, 2016

தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் -பிரித்தானிய தமிழன்
by admin - 0

இலங்கையில் நடந்து முடிந்த இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசினால் ஈழத் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலையையும்,போர்க் குற்றத்தினையும் பிரித்தானிய அரசானது சான்றளிக்க வேண்டும்.


என து பெயர் வேதநாயகம் சஞ்சீவ தனுஷன் நான் தமிழீழத்தை பிறப்பிடமாகவும் தற்போது பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட நான் பிரித்தானிய அரசிடம் மனுவாகச் சமர்ப்பிக்கும் விடயம் என்னவென்றால் இலங்கை அரசானது இறுதி யுத்தத்தில் போது ஈழத்தமிழர் மீது பாரிய இனப்படுகொலையினையும், போர்க்குறத்தினையும் செய்து முடித்துள்ளது என பிரித்தானிய பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என்பதாகும்.எனவே இந்த மனுவில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயம் என்னவெனில்,
சனல் 4 இல் ஒளிபரப்பப்பட்ட ஆவணப் படத்தில் காட்டப்பட்ட சாட்சியங்களையும், மற்றும் ஏனைய ஆவணங்கள்,சாட்சியங்களை அடிப்படையாக கொண்டு சிறிலங்கா அரசாங்கமானது இறுதிக்கட்டப் போரில் எண்ணிக்கையற்ற அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்ததன் மூலம் போர்குற்றங்களையும், பாரிய இனப்படுகொலையையும் புரிந்துள்ளதினை அவ் ஆவணங்கள்,சாட்சியங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. மற்றும் அண்மையில் ஜ.நா வில் இலங்கை அரசாங்கம் போர் குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இருந்தபோதும், பிரித்தானிய அரசாங்கமானது இலங்கை அரசாங்கத்திற்கு ஜ.நா வின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த அழுத்த்தினைக் கொடுக்க வேண்டும் என பிரித்தானியா பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்பதனையும்,
தாமதப்படுத்தப்படும் நீதி, அது மறுக்கப்படுவதற்கு சமம்!
எனவே, நீதி கால தாமதம் ஆகாமல் பல அப்பாவி ஈழத்தமிழ் மக்களைகொன்று குவித்து ஒரு இனப் படுகொலையையும்,போர்க்குற்றங்களையும் நடாத்தி முடித்த இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக உரிய விசாரனையை மிக விரைவில் நடாத்தப்பட பிரித்தானிய அரசாங்கமானது வலியுறுத்தக் கோரி இம் மனுவானது அமைந்துள்ளது.
**



** 
எனவே,
“மேலே உள்ள இணைப்பை  அழுத்தி தங்கள் கையொப்பங்களை இட்டு இம் மனுவிற்கு வலுச்சேர்க்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்”
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
 என்று தெரிவித்துள்ளார்.


« PREV
NEXT »

No comments