Latest News

January 19, 2016

ஆங்கிலத்தை கற்காத முஸ்லிம் பெண்கள் நாடு கடத்தப்படுவார்கள் பிரித்தானியப் பிரதமர் அறிவிப்பு
by admin - 0

பிரித்­தா­னி­யா­வி­லுள்ள முஸ்லிம் பெண்கள் உயர் தரா­த­ரத்­துக்கு ஆங்­கி­லத்தில் புலமை பெறத் தவ­று­வார்­க­ளாயின் நாடு கடத்­தப்­ப­டு­வார்கள் என பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமெரோன் திங்­கட்­கி­ழமை
அறி­வித்­துள்ளார்.

அவ­ரது பழை­மை­வாத அர­சாங்­க­மா­னது தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள சமூ­கங்­களைச் சேர்ந்த பெண்­களை பிரித்­தா­னிய அர­சாங்­கத்­துடன் ஒருங்­கி­ணைக்கும் நட­வ­டிக்­கையின் அங்­க­மாக அவர்­க­ளுக்கு மொழி அறி­வூட்­டு­வ­தற்கு 26 மில்­லியன் யூரோ பெறு­ம­தி­யான திட்­டத்தை ஆரம்­பித்­துள்ள நிலை­யி­லேயே டேவிட் கமெ­ரோனின் இந்த அறி­விப்பு வெளியா­கி­யுள்­ளது.

பிரித்­தா­னி­யா­வி­லுள்ள தமது வாழ்க்கைத் துணை­க­ளுடன் இணைந்து கொள்ள வரும் குடி­யேற்­ற­வா­சிகள் பிரித்­தா­னியா வரு­வ­தற்கு முன் ஆங்­கி­லத்தில் பேசத் தெரிந்­தி­ருப்­பதை அந்­நாட்டு குடி­வ­ரவு சட்­டங்கள் ஏற்­க­னவே வலி­யு­றுத்­து­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் அவ்­வாறு வந்­த­வர்­களும் மேலும் மொழிப் பரீட்­சை­களை எதிர்­கொள்­ள­வுள்­ள­தாக டேவிட் கமெரோன் குறிப்­பிட்டார்.
“நீங்கள் உங்கள் ஆங்­கில அறிவை விருத்தி செய்­யா­விடில் பிரித்­தா­னி­யாவில் தங்­கி­யி­ருப்­பதற்கு உங்­க­ளுக்கு உத்­த­ர­வா­த­மில்லை" என அவர் தெரி­வித்தார்.
“எமது நாட்­டுக்கு வரு­ப­வர்­க­ளுக்கு அதற்­கேற்ப கடப்­பா­டு­களும் உள்­ளன" என அவர் கூறினார்.

டேவிட் கமெ­ரோ­னது அர­சாங்­கத்தின் மதிப்­பீ­டு­களின் பிர­காரம் அந்­நாட்டில் 190,000 முஸ்லிம் பெண்கள் உள்­ளனர். அவர்­களில் 22 சத­வீ­த­மா­ன­வர்கள் ஆங்­கி­லத்தில் மிகக் குறைந்­த­ள வில் உரையாற்றக் கூ டியவர்களாகவோ அல்லது அறவே அந்த மொழியில் உரையாற்ற முடி யாதவர்களாகவோ உள்ளனர்.
அத்துடன் பிரித் தானியாவின் மொத்த 53 மில் லியன் சனத்தொகை யில் 2.7 மில்லியன் பேராக முஸ்லிம்கள் உள்ளனர்.
« PREV
NEXT »

No comments