Latest News

October 05, 2015

திறன்பேசிகளுக்குள் ஊடுருவும் வல்லமை பெற்றிருக்கிறது பிரிட்டிஷ் கண்காணிப்பு நிறுவனம்!
by Unknown - 0

பிரிட்டிஷ் கண்காணிப்பு நிறுவனமான, ஜி.சி.எச்.க்யூ , திறன்பேசிகளுக்குள் (ஸ்மார்ட்ஃபோன்) ஊடுருவித் தகவல்களைத் திரட்டும் வல்லமையைப் பெற்றிருக்கிறது என்று முன்னாள் அமெரிக்க உளவுப் பகுப்பாய்வாளரான, எட்வர்ட் ஸ்னோடன் பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த முதல் பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவுக்கு விசாரணைக்காக நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்க ரஷ்யாவில் இருக்கும் ஸ்னோடன், பிபிசியின் பனோரமா நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியொன்றில், ஜி.சி.எச்.க்யூ கைபேசி மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளைப் பார்க்கமுடியும், மின்னஞ்சல்களையும், படிக்கப்பட்ட இணையப் பக்க வரலாறுகளையும் தெரிந்துகொள்ள முடியும், கைபேசி மூலம் நடத்தப்படும் உரையாடல்களை ஒட்டுக்கேட்பதோடு மட்டுமல்லாமல், எந்த இடத்தில் இருந்து அந்த உரையாடல் நிகழ்த்தப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள முடியும் என்று கூறினார்.

இந்தக் கூற்றுகளை பிரிட்டிஷ் அரசு உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை ஆனால் இந்த நிறுவனம் தேவையான ஒன்று, அது கடுமையான சட்டவரம்புக்குள்தான் செயல்படுகிறது என்று கூறியிருக்கிறது.

உளவுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து ஸ்னோடன் வெளியிட்ட விவரங்களால், இப்போது பயன்பாட்டாளர்கள் சங்கேத மொழியைப் பயன்படுத்துவது பரவிவிட்டது என்றும் இதனால் பயங்கரவாத சதிச்செயல்களை தடுப்பது மேலும் கடினமாகிவிட்டது என்றும் லண்டனில் உள்ள போலிஸ் உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
« PREV
NEXT »

No comments