Latest News

September 12, 2015

யுத்த குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையின் பிரதியை ஐ.நா சிறிசேன அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது
by admin - 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து மேற்கொண்ட விசாரணை அறிக்கையின் பிரதியை ஐ.நா சிறிசேன அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.


அரசவட்டாரங்கள் இதனை உறுதிசெய்துள்ளன, வெள்ளிக்கிழமை இந்த அரசாங்கத்தை சென்றடைந்ததாக அவை குறிப்பிட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 அமர்வு ஆரம்பமாகவுள்ள 14ம் திகதியே இலங்கை வெளிவிவகாi அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றுவார், அவர் அதற்கு முன்னர் விசாரணை அறிக்கை குறித்து ஆராய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் தனது உரையில் இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு பொறிமுறை எவ்வாறானதாக அமைந்திருக்கும் என்பது குறித்து தெரிவிப்பார்.

அரசாங்கம் காணமற் போனவர்கள் விவகாரத்தை கையாள்வதற்கு தனியான ஓரு அலுவலகத்தையும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வொன்றையும், அமைக்கவுள்ளதுடன் முக்கிய சம்பவங்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விசேட பிரிவொன்றையும் ஏற்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
« PREV
NEXT »

No comments