Latest News

September 14, 2015

முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறையினரினால் அச்சுறுத்தல்- செல்வம் அடைக்கலநாதன் எம்.பி
by Unknown - 0

புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு தற்போது குடும்பங்களுடன் சேர்ந்து வாழும் முன்னாள் போரளிகள் மீண்டும் தற்போது புலனாய்வுத்துறையினரின் விசாரனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் விசனம் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தின் பின் இலங்கை அரசிடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் புலி போராளிகள் புனர்வாழ்வு நிலையங்களில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் குடும்பங்களுடன் இணைந்து வாழ்ந்து வரும் நிலையில் அண்மைக்காலமாக திடீர் திடீர் என மறைமுகமாக விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வந்த நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின் விசாரனைகள்,மற்றும் அச்சுரூத்தல்கள் குறைவடைந்த நிலையில் காணப்பட்டது.

ஆனால் தற்போது மீண்டும் முன்னாள் போராளிகள் புலனாய்வுத்துறையினரால் விசாரனைக்கு உற்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளனர்.

இதனால் அவர்களும்,அவர்களுடைய குடும்பங்களும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.உடனடியாக குறித்த விசாரனையை தடுத்து நிறுத்தமாறு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன்.

குறித்த கடிதத்தில் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அவ்hகள் விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு அச்சுரூத்துகின்ற இந்த நிலமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் .

மீண்டும் மீண்டும் அவர்கள் புலனாய்வுத்துறையினரினால் விசாரனைக்குற்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்கள் மாற்றப்பட வேண்டும்.

அவர்கள் நிம்மதியாக  வாழ வழியமைக்க வேண்டும். எனவே உடனடியாக புலனாய்வுத்துறையினரின் விசாரனைகளை  நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments