Latest News

September 10, 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமக்ஷ்டி ஆட்சியும் அதன் நம்பகத் தன்மையும்!
by Unknown - 0

அண்மையில் நடந்த ஊடக சந்திப்பு ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் கூறியிருந்தார்,

ஒற்றை ஆட்சியில் அதிகாரப் பகிர்வு இல்லை சமக்ஷ்டியே இறுதித் தீர்வு.. அதன் அடிப்படையில் நாம் இந்த சமக்ஷ்டி ஆட்சி முறை பற்றி சற்று சிந்தித்து பார்க்க வேண்டி உள்ளது.

அதாவது 2002ம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் ரணிலுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்ட்டதன்பின் இந்தியா போன்ற சமக்ஷ்டி ஆட்சி முறைமையை எமது தேசியத் தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை, ஏன் எனில் நாம் அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் இனம், இந்தியாவில் பல மரபு மொழிகள் அவர்களுக்கு என்று கலாச்சாரம் பண்பாடு உள்ளது அங்கே மத்திய அரசாங்கம் ஒரு இனத்தை ஒடுக்கினால் ஏனைய சிறுபான்மை இனம் குரல் கொடுக்கும் ஆனால் இலங்கைத் தீவில் இரு மொழிகளுக்கு இடையில் உள்ள பிரச்சனை இதனால் சிங்கள அரசு சமக்ஷ்டி ஆட்சியில் எமது நிலத்தை அபகரித்தால், எம்மை இரண்டாம் தரப் பிரயைகளாக  வழிநடத்தினால் எமக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை அதன் அடிப்படையில் சமக்ஷ்டி ஆட்சி எமக்கொரு நிரந்தரத் தீர்வாக அமையாது இதனால் சமக்ஷ்டியை எமது தலமை முற்று முழுதாக  நிராகரித்ததை யாவரும் அறிவர்,

அதேவேளை 2002ம் ஆண்டு தொடக்கம் 2005 இறுதிவரை ரணில் விக்ரமசிங்கேவுக்கும் தமிழீழ விடுதைப்புலிகளுக்கும் நடந்த பேச்சுவார்த்தைகளில் எமது தலைமையால் முக்கியமாக முன்வைக்கப்பட்ட விடையங்களில் ஒன்று சிங்கள இராணுவம் தமிழ்மக்கள் காணிகளில் இருந்து வெளியேற வேண்டும், இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த நிலத்தில் சென்று தமது பூர்வீகத் தொழிலைத் தொடங்கி தமது வாழ்வாதாரத்தைக் கட்டி எழுப்ப வேண்டும், (இதுதான் எமது அடிப்படைப் பிரச்சனையுமாகும்) புலிகளின் அந்த அடிப்படைக் கோரிக்கைகள் எல்லாம் ரணில் சந்திரிக்கா அரசால் நிராகரிக்கப்பட்டு   இன்றுவரை யுத்தம் முடிந்தும் ஆறு வருடங்கள் கடந்தும் எமது மக்கள் தமது சொந்த நாட்டிலேயே அகதிகளாக தமது வாழ்விடத்தை இழந்து, வாழ்வாதாரத்தை  இழந்து வாழ்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எம் ஏ சுமந்திரன் ஊடகத்திற்கு கூறிய சமக்ஷ்ட்டி ஆட்சி அதிகாரம் என்பது ஒரு சந்தேகத்திற்கு உரிய விடயமாக தமிழ் மக்களால் கருத்தப் படுகிறது, சரி சமஸ்ட்டி  ஆட்சி அதிகாரத்தை யார் தருவார்கள்? எவ்வளவு காலத்துக்குள் தருவார்கள்?

அது எந்த வகையில் எமக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும்?.என்ற கருத்துக்கள் எமது அடிமனங்களில் எழத்தான் செய்கிறது, காரணம்....

1)இன்று ஆட்சியில் இருப்பது சிறிசேனா அரசாங்கம், இதே சிறிசேனாதான் இறுதிக்கட்ட  யுத்தம் நடைபெற்ற பொழுது ராஜபக்ச அரசில் heath minister ஆக இருந்து யுத்தத்தால் காயப்பட்ட மக்களுக்கு உரிய  மருத்துவ உதவிகளைக் கட்டுப்படுத்தி இராணுவத்தின் பாரிய குண்டுவீச்சில் வன்னி மண்ணில் தமிழர்கள் கொல்லப்படக் காரணமாக இருந்தவர், போதாக்குறைக்கு ஐந்து தடவை பாதுகாப்பு அமைச்சராக  இருந்து தமிழின அழிப்பு செய்த யுத்தக் குற்ற வாழிகளில் ஒருவரும் ஆவார்.

2) ரணில் விக்ரமசிங்க இவர்தான் 2002ம் ஆண்டு நோர்வையின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்ப்படுத்தி  கருணாவை புலிகள் அமைப்பில் இருந்து பிரித்து புலிகளின் இராணுவ, புலனாய்வு  இரகசியங்களை அறிந்து கேணல் கவ்சலியனைப் படுகொலைசெய்து, சர்வதேசமட்டத்தில் புலிகளை அழிக்க ஆதரவு திரட்டிய ஒரு குள்ள நரி ரணில், இன்றும் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற மாட்டேநெனத்  திட்டவட்டமாக கூறிவிட்டார் அத்துடன் நில்லாமல் ஐக்கிய இலங்கைக்குள்த்தான் தீர்வு, சமஸ்ட்டி முறையில் தீர்வு அல்ல என்பதையும் கடந்த தேர்தல் பரப்புரையில் தெரிவித்து விட்டார். 

3) சந்திரிக்கா குமாரதுங்க, முன்னாள் ஐநாதிபதியாக இருந்து யாழ்தேவி, முன்னேறிபாய்ச்சல், சூரியகதிர், யயசிக்குறு 1,2,3 எனப் பெயரிட்டு வலிகாமத்தைக் புலிகளிடம் இருந்து கைப்பற்றி பத்து லச்சம் தமிழர்களை அகதிகளாக்கி வன்னி நிலத்தை ஆக்கிரமிக்க  பல பலபோர்களைத் தொடக்கி மக்களைக் கொன்று குவித்தது மட்டுமல்லாது, செம்மணிப் புதைகுழியில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகளைக் கொன்று புதைத்து, கிருசாந்தி குமாரசாமி போன்ற பல படுகொலைக்கு சூத்திரதாரியும் ஆவர், அது மட்டும் அல்ல எமக்காக ஜனநாயக வழியில்க் குரல் கொடுத்த பாராளமன்ற உறுப்பினர்கள் மாமனிதர் குமார் பொன்னம்பலம், மாமனிதர் யோசப் பரராஜசிங்கம் போன்றோர் படுகொலைக்கு சொந்தக்காறியுமாவார். 

4) தற்போதைய பாதுகாப்பு அமைச்சரும் இறுதிப் போரை நடாத்தி முள்ளிவாய்க்காலில் தமிழ் இன அழிப்புச் செய்தவரும், செய்து பீல்ட் மார்சல் பதவி ஏற்றவரும், இன்றும் தமிழ் மக்களை சிங்களப் புலனாய்வு துறையினரின் அச்சுறுத்தலின் கீழ் வைத்திருப்பவருமான சரத் பொன்சேகா இவர்கள் எப்படி எமக்கு சமக்ஷ்டி முறையில் அதிகாரத்தைப் பகிர்ந்து எமது இறமையை ஏற்று தமிழர்களும் இலங்கைக் குடிமக்கள் என்பதை அனுசரித்து நடப்பார்கள்? என்ற சந்தேகம் இன்று பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் எழுகின்றது, இவர்கள்தான் இன்று ஒன்று சேர்ந்து தேசிய அரசாங்கம் அமைத்திருக்கிறார்கள் அதுதான் இன்றைய சிறிலங்காவின் நல்லாட்சி அமைக்கும் அரசாம்? இவர்களிடம்தான் எதிர்க் கட்சித் தலைவர் திரு சம்பந்தன் சமஸ்ட்டி அதிகாரத்தைப் பெற்று தமிழ் மக்களுக்கு சுபேட்சமான எதிர்காலத்தை நிலைநிறுத்தப் போறாராம்.  அதேபோல் மேலும் சில கேள்விகள் எழுகின்றன.....

சமக்ஷ்டி முறைதான் தீர்வு எண்டால் அதை ஏன் முன்னைய சிங்கள அரசியல்வாதிகள் செய்யவில்லை? செய்திருந்தால் இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இரண்டரை லச்சத்திற்கு மேற் பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் பலியாகி இருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது, ஐம்பது ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட போராளிகள் மாவீரர்கள் ஆகி இருக்க மாட்டார்கள்..... தமிழ் மாணவர்களுக்கு எதிராக கல்வித்தரப்படுத்தல், சிங்களம் மட்டுமே ஆட்சி செய்ய முடியும், சிறீலங்கா ஒரு சிங்கள புத்தனாடு, தமிழர்கள் இரண்டாம் தரப் பிரயைகள், நில அபகரிப்பு, தமிழ் பிரதேசங்களின் பெயர்களை மாற்றி சிங்கள மயமாக்கல், போன்ற செயல்கல் ஆயுதப் போரட்டத்தை எமது தலமை ஆரம்பிக்க வழி அமைத்துக் கொடுத்தது, இன்றும் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் தமிழ் சத்தமில்லாத ஒரு ஒடுக்குமுறையை எமது இனத்தின் மேல் திணித்திருக்கின்றது.

இப்படிப்பட்ட யுத்தக் குற்றம் புரிந்தவர்கள் இன்று சர்வதேச சுயாதீன விசாரணைகளில் இருந்து 65 வருட காலமாக தாமும் தமது முன்னாள்  அரசியல்வாதிகளும் செய்த தமிழின அழிப்பில் இருந்து தம்மைப் பாதுகாக்க எடுத்த முடிவுதான் எதிர்க்கட்சித் தலைவராக திரு  சம்பந்தனை நியமித்தது, அதே நேரம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதலாவது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுதுதான் 1983ம் அண்டு இனக் கலவரம் நடந்து 3000 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழ்  மக்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள் தமிழ் அரசியல்க்கைதிகளும் சிறைக்குள் படுகொலை செய்யப்பட்டார்கள், இப்பவும் திரு சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப் பட்டபின்ன்னர் மகசின் சிறையில் இருந்த தமிழ் அரசியல்க் கைதிகள் இனரீதியாக, திரு சம்பந்தனின் எதிர்க்கட்சி நியமனம் தொடர்பாக, ஆடைகள் களையப்பட்டு சித்திரவதைக்கு ஆளானார்கள் இதற்க்கு எதிராக எதிர்க்கட்சித் தச்லைவர்  என்ற வகையில் திரு சம்பந்தன் தேசிய அரசாங்கத்திடம் ஏதாவது கேள்வி எழுப்பமுடிந்ததா? அல்ல அந்த சிறை அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைதான் எடுக்க முடியுமா ?...

அமைதி முறையில் எமது இனத்தின் இருப்பை அழித்து சிங்கள புத்த நாட்டை எதிர் காலத்தில் அமைக்க எடுக்கும் நடவடிக்கையாளர்களே இந்த தேசிய அரசாங்கம், ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு அந்த நாட்டைப பிரிக்க முயலமுடியாது  என்ற மாயைக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் தலைவர் சிக்கித் தவிக்கப்போகிறார் என்பது எனது கருததாக அமைகிறது. மட்டுமல்லாது எதிர்க்கட்சித் தலைவரால் கீழ்க் குறிப்பிடப் பட்டுள்ள கேள்விகள் தமிழ் மக்கள் மனங்களில் எழுகின்றது இவற்றுக்கு எதிர்க்கட்சித் தலைவரால் பதில் கூறமுடியுமா.....

இன்று ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் மைத்திரி பால ஸ்ரீசேன இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்து தமிழின அழிப்பு செய்தது ஒரு குற்றம், இரண்டாவது கொடிய குண்டுவீச்சில் முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் ஆயிரக்கணக்கில் படுகாயமுமுற்று எந்த மருத்துவ வசதிகளும் இன்றி செத்து மடிந்தார்கள் அவ்வேளையில் நாட்டினுடய ஒரு சுகாதார அமைச்சராக இருந்த ஸ்ரீசேன காயப்பட்ட மக்களுக்குரிய மருத்துவ வசதிகளை கட்டுப்படுத்திப் படுகொலை செய்தது சர்வதேச மனித் உரிமைகளை மீறிய செயலாகும்  இவர் எப்படி எமக்கொரு அமைதியான நிரந்தரத்  தீர்வைத் தருவார்? அப்படி ஒரு தீர்வுகிடைத்தால் எதிர்காலத்தில் இவர்களால் இதேபோல் ஒரு குற்றம் நடந்தால் பதிக்கப்பட்ட தரப்பாகிய நாம் இவர்களுக்கு எதிராக எப்படிப்பட்ட  நடவடிக்கை எடுக்க முடியும்? என்ற கேள்வியும்  எழத்தான் செய்கின்றது....

இன்றும் கூட எமது கண் முன்னே இறுதி யுத்தத்தில் தமது பிள்ளைகளை, கணவன்மாரை, இராணுவத்திடம் ஒப்படைத்த தாய்மார், மனைவிமார், காணாமல் போனோரை கண்டறியும் அணைக்குழுவில், LLRC  அந்த விசாரணைக் குழுவில் முறைப்பாடு செய்யும் பொழுது அவர்கள், அந்த மக்களின் முறைப்பாட்டில் கவனம் செலுத்தாது  ஆடு கிடைத்ததா, மாடு கிடைத்ததா, நக்ஷ்டஈடு 25000 ரூபா கிடைத்ததா? வீட்டுத்திட்டம் கிடைத்ததா? இப்படியான கேள்விகள் கூட பதிக்கப்பட்ட மக்களிடம் அந்த அதிகாரிகள் முன்வைக்கும்பொழுது LLRC யின் விசாரணைக் குழுவினரின் நோக்கம் என்னவென மிகத் தெளிவாகத் தெரிகின்றது, பதிக்கப்பட்ட மக்கள் தாம் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்த தங்கள் கணவரை, தங்கள் பிள்ளைகளை கண்டுபிடித்துத் தாருங்கள் எனக் கேட்கும்போது அந்த LLRC அதிகாரிகளின் செயலும் உள்ளக விசாரணை என்ற பெயரில் சிங்கள் ஆட்சியாளர்கள் செய்யும் ஒரு குற்றமாக பதிக்கப்பட்ட மக்களால் கருதமுடிகின்றது. இந்த வேளையில் ஜக்கிய இலங்கைக்குள் சமக்ஷ்டி தீர்வை நோக்கியும் ஸ்ரீலங்காவின் எதிர்காலத்தை நோக்கி நகரும் எம் ஏ சுமந்திரன் போன்ற சட்ட வல்லுனர்கள் இது போன்ற விசாரணைக் குழுவின் செயற்பாட்டிற்கு  எதிராக குரல் கொடுக்காமல் இருப்பதும், சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் பாதிக்கப்பட்ட மக்கள் மனங்களில் அச்சத்தையும் வேதனையையும் கேள்வியையும் எழுப்புகின்றது.. 

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரும் சமக்ஷ்டியில் இன்னும் சில கேள்விகள் எழுகின்றன... வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த தமிழர் தாயகம் ஆக அங்கிகரிக்கப் படுமா? வடக்கு கிழக்கில் இருந்து 
இராணுவம் வெளியேறுமா?

அத்து மீறிய சிங்கள குடியேறிகள் வெளியேர்ரப்படுவார்களா?

காணி காவல்துறை அதிகாரம் வழங்கப் படுமா?

இவற்றுக்கு புதிய அரசு உடனடித் தீர்வு தருமா, அல்ல கடந்த காலங்களைப் போன்று காலத்தை இழுத்தடிப்புச் செய்யுமா? என்ற அச்சமும் நிலவுகின்றன, ஒன்றை மட்டும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் மகிந்த அரசோ, மைத்திரி அரசோ, எந்த அரசு வந்தாலும் தமிழ் மக்களின் பூர்வீக  நிலங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றும் ஆர்வம் 30 வருடங்களாக சொந்த வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளில் குடியாமர்த்துவதர்க்குக் காட்டவில்லை, அதேநேரம் எந்த சிங்கள அட்சியளர்களும் எமது பூர்வீக, பாரம்பரிய, நிலத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்றி எமது  மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றி அவர்களின் நிலங்களை மீளளிக்கப்போவதில்லை, எமது நிலமான யாழ் கைதடியில் 500 சிங்களக்குடும்பங்களுக்கு 2009ம் ஆண்டின் பின்னர் காணி கொடுத்து வீடமைத்து கொடுத்த அளவில் வழிவடக்கை தமது பூர்வீகமாகக் கொண்ட தமிழ் மக்கள் கடந்த 30 வருடங்களாக இன்றும் அகதிகளய்ததான் பல துன்பத்தின் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள், எது எவ்வாறாயினும் சர்வதேச விசாரணை ஒன்றே  எமக்கு அவசியமான ஒன்று அதைத்தான் பதிக்கப்பட்ட தமிழ் மக்களும் எதிர் பார்க்கிறார்கள் அதனூடாகவே எமக்கொரு நிரந்தர அரசியல்த் தீர்வு கிடைக்கும் என்பது எமது உறுதியான நம்பிக்கை.

தயீசன்
« PREV
NEXT »

No comments