Latest News

September 01, 2015

எமது மக்கள் மீது நடைபெற்றது இனபாடுகொலைதான் நீதியான சர்வதேச விசாரணை வேண்டும்தர்சிகா
by admin - 0

தாயகத்தில்  எமது மக்கள் மீது இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டது இனஅழிப்பு நடவடிக்கைதான் அதற்கான நீதியான சர்வதேச விசாரணை வேண்டும் என்பதே தமிழர்களின்  உறுதியான நிலைபாடு என சுவிஸ்சர்லாந்தில் பாராளுமன்ற தேர்தலில் வேட்பளராக போட்டியிடும் கிருஸ்னானந்தம் தர்சிகா தெரிவித்துள்ளர்.


அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கை தீவில் எமது தாயகப்பகுதிகளில்  இலங்கை அரசுகளினால்ஆறுபது வருடங்களுக்கு மேலக நடைபெற்ற இனஅழிப்பு செயற்பாடுகள் 2009ம் ஆண்டு முள்ளிவாய்கள் பகுதிகளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட எமது உறவுகள் உயிழந்தனர்.

அத்துடன் பல ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் குடும்பத்தவர்கள் சிறுவர்கள் வயோதிபர்கள் என காணமலாக்கப்பட்டனர்.

ஆயிரங்கணக்கான எமது நிலங்கள் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது பல நூற்றுக்கணங்கான எமது சகோதரர்கள் எதுவிதமான குற்றங்கள் இன்றுசிறையில் இன்றுவரை தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பல வகையிலும் எமது இனம் இலங்கை அரசினால் இனவழிப்புக்களில் தொடர்ந்து இன்றுவரை சிக்கித் தவிக்கின்றது இதற்கான தீர்வு தற்போதைய புதிய தேசிய அரசினால் நீதியான தீர்வு வழங்கப்படும் எதிர்பார்க்க முடியாது இன்றுவரை எமக்கு நீதி கிடைக்கும் என்று போராடிவரும் தமிழ்மக்கள் குற்றம் இழைந்தவர்களே நீதி வழங்குவர்கள் என்று  சர்வதேச நாடுகள் சில கூறினாலும் அதனை ஏற்கும் மனநிலையில் தமிழர்கள் நாம் இல்லை யுத்தம் நிறைவடைத்து ஆறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் எமது மக்களின் அடிப்டை  வசதிகள் கூட கிடைக்கவிடாமல் இலங்கை அரசங்கம் தடுத்துவருகின்றது புதிய அரசங்கம் என்ற பெயரில் ஆறுமாதங்கள் ஆட்சியில் இருந்தவர்கள்  தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகள் எவை அவர்கள் செய்த நல்லிணங்கம் என்ன ? 
என்று சிந்தித்துப்பாருங்கள் சர்வதேச நாடுகளுக்கு தமது முகங்களை நல்லவராக கட்டிக்கொண்டு  இன்று வரை எமது மக்களை தொடர்தும் அடக்குமுறைகளில் வைத்திருப்பதே அவர்களின் திட்டங்கள் எனவேதான் எமது மக்களுக்கு நடைபெற்றது இனஅழிப்புத்தான் அதற்கான நீதியான விசாரனை ஐ நா சபையினால் மேற்கொள்ளவேண்டும் அத்துடன் எமதுமக்களின் பாதுகாப்பு அரசியல் தீர்வு  என்பன சர்வதேச நாடுகள் ஐ நா சபை உறுதிப்பாடுத்தவேண்டும் என அவர் தெரிவித்தார்.


அதுவரை எமது மக்கள் தாயகத்திலும் புலத்திலும் தமிழகத்திலும் தொடர்சியாக குரல் கொடுத்து போராட்டங்களை மேற்கொள்ளவேண்டும் அப்போதுதான் எமக்கான நீதி எமக்கு கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்


« PREV
NEXT »

No comments