Latest News

September 17, 2015

ஐ.நா விசாரணை அறிக்கையில் இருந்து போர்க்குற்றவாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டதா?
by Unknown - 0

ஐ.நா விசாரணை அறிக்கையில், போர்க்குற்றவாளிகள் எவரது பெயர்களும் உள்ளக்கப்படவில்லை, இந்தநிலையில் ஏற்கனவே அதில் இடம்பெற்றிருந்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்பான குற்றவாளிகள் தொடர்பான பெயர்களை வெளியிடும் நோக்கம் ஐ.நாவுக்கு இல்லை என்று ஐ.நா ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.நா விசாரணை அறிக்கையில், குற்றவாளிகள் என்று எவருடைய பெயரும் உள்ளடக்கப்படாது.

இது மனித உரிமைகள் குறித்த விசாரணையேயாகும். இது குற்றவியல் விசாரணை அல்ல.” என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள இன்னர் சிற்றி பிரஸ்,

அனைத்துலக ரீதியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டிருந்த ஐ.நா அறிக்கையில், முழுமையான அனைத்துலகப் பொறுப்புக்கூறும் பொறிமுறைக்குப் பதிலாக, சிறப்பு கலப்பு நீதிமன்ற முறையை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் அறிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையில் ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவராக இருந்த பாலித கொஹன்ன மற்றும் ஐ.நாவுக்கான துணைத் தூதுவராக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா ஆகியோரின் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தன.

எனினும், இறுதிக் கட்டத்தில் வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களைப் பாதுகாப்பதற்கு அனைத்துலக தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்டு தோல்வியடைந்த முயற்சிகள் பற்றி இந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஐ.நா தனது செயற்பாட்டை மறைத்திருக்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் இணையவழியாக முன்கூட்டியே கேள்விகளைக் கேட்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

ஜெனிவாவில் ஊடகவியலாளர் சந்திப்புக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தைவிட 10 நிமிடம் முன்னதாகவே ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அதிலிருந்து வெளியேறி விட்டார் என்றும் தெரிவித்துள்ளது.
« PREV
NEXT »

No comments