Latest News

September 17, 2015

ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகும் அகதிகளுக்கு கூகுள் மூலம் நீங்களும் உதவ முடியும்!
by Unknown - 0

உள்நாட்டுப் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடையும் அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்கான பிரசாரத்தை கூகுள் நிறுவனம் தொடங்கி உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் Google.com/refugeerelief என்ற இணையத்தளம் மூலம் தமது நன்கொடையை வழங்க முடியும் என கூகுள் அறிவித்துள்ளது.

இதன் முதற்கட்ட நிதியாக 36.5 கோடி ரூபாவை கூகுள் செலுத்து ஆரம்பித்து வைத்துள்ளது.

மேலும் இந்தத் தொகைக்கு இணையாக 36.5 கோடி ரூபா நன்கொடை திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு உதவி செய்து வரும் Doctors without Borders, சர்வதேச மீட்புக் குழு, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு ஆகிய இலாப நோக்கற்ற 4 நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் காரணமாக இலட்சக் கணக்கானோர் அங்கிருந்து அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் 40 இலட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments