Latest News

September 07, 2015

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு விரைவில் அரசாங்க வேலைவாய்ப்பை வழங்கக் கோரிய யாழில் கவனயீர்ப்பு போராட்டம்
by admin - 0

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு விரைவில் அரசாங்க வேலைவாய்ப்பை வழங்கக் கோரிய கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.இந்த போராட்டத்திற்கு வடமாகாணத்திலுள்ள வேலையில்லா உள்வாரி,வெளிவாரி, தேசிய உயர் தொழில்நுட்ப பட்டதாரிகள் கலந்துகொண்டிருந்தனர் 

அரச வேலைவாய்பை வழங்கக்கோரிய கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளினால் பல தடைவை முன்னெடுக்கப்பட்டு நாட்டின் ஜனாதிபதிஇ பிரதமர் மற்றும்  மக்கள் பிரதிநிதிகளிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டன. அது தொடர்பில் இதுவரை சாதகமான பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.இந்நிலையில் இறுதியாக கடந்த சித்திரை மாதம் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக இரவு பகலாக இரண்டு நாட்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளினால் முன்னெடுக்கப்பட்டது. 
இதன்போது வடமாகாண அமைச்சுக்களின் கீழ் வேலையற்ற பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்வதற்காக புதிதாக ஆளனி வெற்றிடங்கள் உருவாக்கப்படவுள்ளதாகவும் அதற்கு ஒரு மாதகால அவகாசம் தேவை எனவும் மேலும் குறித்த பிரச்சினை தொடர்பில் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வு பெற்றுத்தருவதாகவும் வடமாகாண சபை  அமைச்சர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இரண்டு நாள் ஆர்ப்பாட்டம் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளினால் தற்காலிகமாக கைவிடப்பட்டது. 
news

இதற்கமைய 1478  புதிய ஆளணி வெற்றிடங்கள் வடமாகாண அமைச்சரவையின் கீழ்   உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அனுமதியை பெற முகாமைத்துவ சேவைப் பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் மற்றும் வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் விபரம் உத்தியோகபூர்வமாக வடமாகாண சபையில் பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும்  குறித்த வடமாகாண அமைச்சர்களினால் எமக்குத் தெரிவிக்கப்பட்டது.இதேவேளை கடந்த அரசாங்கத்தினால் தேசிய ரீதியில் 2012 மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பட்டம்பெற்ற 5ஆயிரத்து 500 பட்டதாரிகளை அரசவேலை வாய்ப்பில் உள்ளீர்ப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அத்தகைய அறிவுறுத்தல்களின் பிரகாரம் எதுவித வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கவில்லை.இவ்வாறான நிலையில் புதிய அரசாங்கம் தற்போது ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் தேசிய ரீதியில் காணப்படும் வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைகளை புதிய அரசாங்கம் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் வடமாகாண அமைச்சரவையின் கீழ்  புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆளணி வெற்றிடத்திற்கான அனுமதியை உடனடியாக வழங்கி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளை அரச வேலைவாய்ப்பில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியே எமது போராட்டம் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
« PREV
NEXT »

No comments