Latest News

September 19, 2015

நேதாஜி பற்றிய இரகசிய ஆவணங்களை வெளியிட்டது மேற்கு வங்க அரசு
by admin - 0

நேதாஜி சுபாஷ் சந்­தி­ரபோஸ் குறி த்த இது­வ­ரையில் இர­க­சி­ய­மாக வைக்­கப்­பட்­டி­ருந்ந 64 ஆவ­ணங்­களை மேற்கு வங்­காள அரசு நேற்று வெளி­யிட்­டது.
nethaaji

சுதந்­திர போராட்­டத்­தின்­போது 1939ஆம் ஆண்டு மகாத்மா காந்தி, ஜவ­ஹர்லால் நேரு ஆகி­யோ­ருடன் ஏற்­பட்ட கருத்து வேறு­பாட்டால் காங்­கி­ரஸில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்­தி­ரபோஸ் வில­கினார். பின்னர் அவர் ஜேர்­மன் மற்றும் ஜப்பான் நாடு­க­ளுக்கு சென்று இந்­திய தேசிய இரா­ணு­வத்தை உரு­வாக்கி இந்­தி­யாவில் வெள்­ளை­யர்­க­ளுக்கு எதி­ராக போரா­டினார். பின் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்­து­விட்­ட­தாக கூறப்­பட்­டது.

எனினும், அதை நேதா­ஜியின் குடும்­பத்­தி­னரோ, அவ­ரு­டைய ஆத­ர­வா­ளர்­களோ ஏற்­க­வில்லை. இந்த விமான விபத்து சம்­ப­வத்­துக்கு பின்னர் நேதாஜி முன்­னைய சோவியத் ரஷ்­யா வில் வாழ்ந்­த­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. இதனால் நேதாஜி இறந்­தாரா, உயி­ரோடு இருக்­கி­றாரா? என்ற சர்ச்சை அண்­மைக்­காலம் வரை நீடித்­தது.

இந்­நி­லையில், 40 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக பரா­ம­ரித்து வரும் அவரை பற்­றிய 100க்கும் மேற்­பட்ட இர­க­சிய கோப்­பு­களை பகி­ரங்­க­மாக வெளி­யி­ட­வேண்டும் என்று பல்­வேறு அர­சியல் கட்­சிகள் மத்­திய அரசை வலி­யு­றுத்தி வரு­கின்­றன. இவற்றை வெளி­யிட் டால், மேற்கு வங்க மாநி­லத்தில் சட்டம் ஒழுங்கு சீர்­கு­லையும், நட்பு நாடுகள் சில­வற்­றுடன் உற­வுகள் பாதி க்­கப்­படும் என்­பதால் அந்த கோப்­புகள் பகி­ரங்­க­மாக வெளி­யி­டப்­ப­டா மல் பாது­காக்­கப்­பட்டு வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந் நிலையில், நேதாஜி சுபாஷ் சந்­திர போஸ் தொடர்­பான 64 ஆவ­ண ங்­களை மேற்கு வங்­காள அரசு நேற்று வெளி­யிட்­டது. டிஜிட்டல் மய­மாக்­கப்­பட்ட 64 ஆவ­ணங்­களும் அங்­குள்ள பொலிஸ் அருங்­காட்­சி­ய­கத்தின் முதல் தளத்தில் பொது­மக்கள் பார்­வைக்­காக வைக்­கப்­ப­ட­வுள்­ளன. இந்த ஆவ­ணங்­களை கொல்­கத்தா பொலிஸ் ஆணையர் சுரஜித் வெளி­யிட்டார்.

அத்­தோடு இவ் ஆவ­ணங்கள் அட ங்­கிய இறுவட்டு நேதாஜி குடும்­பத்­தி­ன­ரி­டமும் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. 12,744 பக்­கங்கள் கொண்ட இந்த ஆவணங்கள் பொது மக்கள் பார்வை க்காக பதிவேற்றம் செய்யப்படும் பணி தொடங்கியுள்ளது. இந்த ஆவ ணங்கள் அனைத்தும் எதிர்வரும் திங்கட் கிழமை பொதுமக்கள் பார் வைக்கு வைக்கப்படும் என்றும் கூறப் படுகிறது.
« PREV
NEXT »

No comments