Latest News

September 26, 2015

மோனாலிசா ஓவியத்தில் இருக்கும் பெண்ணை கண்டறிய ஆய்வு
by Unknown - 0

ஓவியர் லியனார்டோ டாவின்சியின் பிரபல ஓவியமான ‘மோனாலிசா’-விற்கு மொடலாக இருந்த பெண்ணின் உடலை கண்டறியும் பணியில், இத்தாலி நாட்டின் போலோக்னா பல்கலைக்கழகம் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இத்தாலியில் ஃபிளாரன்ஸ் நகரில் வசித்து வந்தபோது லியனார்டோ வரைந்த ஓவியமான மோனாலிசாவில் உள்ள பெண்ணின் சிரிப்புக்கு காரணம் என்ன என உலகம் முழுவதும் உள்ள ஓவிய விரும்பிகளின் மனதில் கேள்வி இருந்துகொண்டேதான் இருக்கின்றது.

இந்நகரில் வசித்த பட்டு வியாபாரியின் மனைவியான லீசா கெரார்தினி என்பவர்தான் மோனாலிசா என்று பெரும்பாலானோரால் நம்பப்பட்டு வருகிறது.

இதையடுத்து, அப்பகுதி தேவாலய கல்லறையில், 14 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த லியோனார்டோவின் மொடலென நம்பப்படும் இந்தப் பெண்ணின் எலும்புக்கூடுகளை தற்போது கண்டெடுத்துள்ளனர்.

எனினும், மண்டையோடின்றி அந்த எலும்புக்கூடும் மிகவும் சீர்குலைந்த நிலையில் உள்ளதால் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

அவரின் மண்டையோடு கிடைத்தால்தான் இந்தப்பெண் மோனாலிசாவா என்பது தொடர்பில் உறுதிசெய்யலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
« PREV
NEXT »

No comments