Latest News

September 15, 2015

வித்தியாவின் சடலத்தில் இருந்து பெறப்பட்ட விந்தணுக்கள் சட்ட வைத்திய அதிகாரியால் மன்றில் சமர்ப்பிப்பு
by admin - 0

புங்குடுதீவில் கூட்டு வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணுவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது.

குறித்த மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கு ஊர்காவற்துறை நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, கொலை செய்யப்பட்ட மாணவியின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணு மாதிரியை சட்ட வைத்திய அதிகாரி மயூரன் இந்த வழக்கின் மேலும் ஒரு தடயப் பொருளாக, நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதற்கமைய குறித்த விந்தணு மாதிரியை மரபணு பரிசோதனைக்காக, அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், முன்னதாக சந்தேகநபர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள மரபணுக்களுடன் அதனை ஒப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மடிகணணி கையடக்க தொலைபேசி மற்றும் ரப் ஆகியவற்றில், குற்றச்செயல் தொடர்பான வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் இருந்தனவா என்பதை கண்டுபிடிக்குமாறு முன்னதாகவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் அதனை கண்டுபிடிக்க வசதியற்ற நிலையில் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டப்பட்டது.இதனைத் தொடர்ந்து நீதவான் குறித்த தடயப் பொருட்களை மீளப்பெற்று மேலதிக ஆய்விற்காக இலங்கை கணிணி அவசர நடவடிக்கை பிரிவிற்கு அனுப்பி வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments