Latest News

September 12, 2015

சிங்கப்பூர் தேர்தலில் ஆளுங்கட்சி அமோக வெற்றி!
by Unknown - 0

சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல்கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

சிங்கப்பூர் 1965 இல் சுதந்திரம் அடைந்தது முதல் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றிவந்துள்ள மக்கள் செயல்கட்சி இம்முறை தேர்தலில் கிட்டத்தட்ட 70 வீதமான வாக்குகளை பெற்று மொத்தமாகவுள்ள 89 இடங்களில் 83 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

சிங்கப்பூரை நிறுவிய தலைவர் லீ குவான் யூ-வின் மறைவினை அடுத்து மக்கள் மத்தியில் எழுந்த தேசப்பற்று உணர்வே ஆளும் கட்சி வாக்குகளை அள்ளக் காரணம் என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இம்முறை மக்கள் செயல்கட்சி போட்டியிட்ட எல்லாத் தொகுதிகளிலும் முதல் முறையாக போட்டியிட்ட எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி ஆளும்கட்சியை தோற்கடிக்க முடியும் எனறு நம்பியிருந்தது.

2011-ம் ஆண்டு தேர்தலில் முதல்தடவையாக குறைந்த அளவில் 60 வீதமான வாக்குகளை வென்றிருந்த மக்கள் செயல்கட்சி 87 ஆசனங்களில் 80 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியிருந்தது.
« PREV
NEXT »

No comments