Latest News

September 04, 2015

தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஈருருளிப் பயணம்
by admin - 0

தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் நேற்றைய தினம் காலை நெதர்லாந்து ப்றேடா நகரை நோக்கி 72 KM சென்று மாலை 3 மணியளவில் பெல்ஜியம் எல்லைப்பகுதியில் வந்தடைந்தது .


அங்கு நெதர்லாந்து மனிதநேய செயற்பாட்டாளர்கள் ஈருருளிப் பயணத்தை பெல்ஜியம் செயற்பாட்டாளர்களிடம் கையளித்தனர் .

அதை தொடர்ந்து பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மனிதநேய ஈருருளிப் பயணத்தை ஒருங்கிணைத்து அன்ற்வேர்பேன் நகரில் உள்ள மாவீரர்கள் கல்லறையை நோக்கி பயணித்து அங்கு அகவணக்கம் செலுத்தியதுடன் தொடர்ந்து அங்கிருந்து புருச்சல் நகரை நோக்கி 90 KM பயணித்துள்ளனர் .


இன்றைய தினம் (04.09) ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னர் மதியம் 13 மணிக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற இருக்கின்றது . அத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்தோடு முக்கிய அரசியல் சந்திப்புகள் நடைபெற இருக்கின்றது .

இச் சந்திப்பில் உலகத்தில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையே பரிகார நீதியை நிலைநாட்டும் என்று வலியுறுத்தப்படும் .


அரசியல் சந்திப்புகள் நிறைவில் மனிதநேய ஈருருளிப் பயணம் தொடர்ந்து லக்சம்புர்க்,பிரான்ஸ் , யேர்மனியை ஊடறுத்து சுவிஸ் நாட்டுக்கு சென்று எதிர்வரும் 21 ம் திகதி மாபெரும் ஐநா பேரணியில் இணைந்துகொள்ளும் .


தமிழின அழிப்புக்கு நீதி கோரும் இப் பேரணியில் அனைத்து ஐரோப்பிய வாழ் தமிழ் மக்களும் கலந்துகொள்ளவேண்டும் காலத்தின் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது

« PREV
NEXT »

No comments