Latest News

September 02, 2015

சிறப்பாக தற்கொலை செய்வது எப்படி? 89 வெப்சைட்டுகளை ஃரெபர் செய்து உயிரை மாய்த்த பெங்களூர் பெண்
by Unknown - 0

13வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட பெங்களூரை சேர்ந்த பேஷன் டிசைனர், சிறப்பான வகையில் தற்கொலை செய்துகொள்வது எப்படி என்பது குறித்து 2 நாட்களாக தனது ஸ்மார்ட் போன் வழியாக இணையதளங்களில் தேடுதல் வேட்டை நடத்தியுள்ள தகவலை தடயவியல் ஆய்வு மையம் அம்பலப்படுத்தியுள்ளது. இரு நாட்களில் அவர் மொத்தம் 89 வெப்சைட்டுகளை ஃரெபர் செய்துள்ள தகவல் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த 26 வயது பேஷன் டிசைனர் இஷா கன்டா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் ஹெச்.எஸ்.ஆர். லே-அவுட்டிலுள்ள ஷோபா கிளாசிக் என்ற 13 மாடி கொண்ட அடுக்குமாடு குடியிருப்பின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த வழக்கை விசாரிக்கும் போலீசார் முதலில் இது கொலையாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை தொடங்கினர். ஆனால் கிடைத்துவரும் ஆதாரங்கள், இஷா தற்கொலை செய்துகொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகளையே அதிகப்படுத்துகின்றன.

இஷாவின் ஸ்மார்ட் போனை ஆய்வு செய்த தடயவியல் நிபுணர்கள் ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்வதற்கு 48 மணி நேரங்களுக்கு முன்பிருந்தே, இஷா எப்படி சிறப்பான வகையில் தற்கொலை செய்துகொள்வது என்பதை அறிய கூகுளில் தேடி பல்வேறு வெப்சைட்டுகளை படித்துள்ளார். மொத்தம் 89 வெப்சைட்டுகளை அவர் 48 மணி நேர இடைவெளியில் பார்த்துள்ளாராம்.

எப்படியெல்லாம் தற்கொலைகள் செய்யலாம், எது சிறந்த தற்கொலை வழிமுறை, பெங்களூரில் உயர்ந்த கட்டிடங்கள் எங்கெல்லாம் உள்ளன... என்பது போன்று பல்வேறு அம்சங்களை இஷா தனது ஸ்மார்ட் போனிலுள்ள இணையத்தின் மூலம் தேடிப்பிடித்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று கால் டாக்சியை வாடகைக்கு அமர்த்தி அல்சூர் மற்றும் சர்ஜாப்பூர் ரோடு ஆகிய பகுதிகளிலுள்ள 2 அப்பார்ட்மென்ட்டுகளுக்கு விசிட் அடித்து அதில் இருந்து குதிக்க முடியுமா என்று 'கள ஆய்வு' நடத்தியுள்ளார் இஷா.

மேற்கண்ட அப்பார்ட்மென்ட்களில் காவல் கெடுபிடி அதிகம் இருந்ததால், திரும்பிவிட்டார். ஆனால் ஹெச்.எஸ்.ஆர். லே-அவுட் அப்பார்ட்மென்ட் புதிதாக கட்டப்பட்டதால் அங்கு அதிக ஆள் நடமாட்டம் இல்லை. காவலர் கெடுபிடியும் குறைவாக இருந்துள்ளது. எனவே அந்த குடியிருப்பை செலக்ட் செய்த இஷா, சுமார் 2 மணிநேரம் அந்த குடியிருப்பில் சுற்றி திரிந்துள்ளார்.

குடியிருப்பின் கடைசி மாடிக்கு செல்லும் வழியை கண்டறிந்துகொண்டு, இருட்டும் வரை காத்திருந்த இஷா, இரவு 8.30 மணிக்கு குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். முன்னதாக, தலைகீழாக குதிப்பதா அல்லது பக்கவாட்டில் குதிக்க வேண்டுமா என்பதையெல்லாம் கூட கூகுளில் தேடி ஃரெபர் செய்துள்ளார் இஷா. அவர் திட்டமிட்டபடியே, தற்கொலை முழுமையடைந்துள்ளது. ஏனெனில், 13 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்ததால், உடல் சிதறிவிட்டதாம். போஸ்ட் மார்டம் செய்த டாக்டர் குழுவுக்கு உடல் பாகங்களை பொருத்தி சோதித்து பார்ப்பதே பெரிய சவாலாக இருந்துள்ளது.

தற்கொலை செய்த இடத்தில் கிடைத்த இஷாவின் கைப்பைக்குள், போதை மாத்திரை, 250 கிராம் கஞ்சா இருந்துள்ளது. சாதாரண மனநிலையில் இருப்பவரால் திட்டமிட்டு தற்கொலை செய்துகொள்வது சாத்தியமற்றது. பயம் அவர்களை தடுத்துவிடும். எனவே போதையின் பிடியில் வைத்திருந்து இஷா தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்கின்றனர் மனோதத்துவ டாக்டர்கள்.

இஷா தற்கொலை செய்துகொண்டுள்ளது ஏறத்தாழ உறுதியாகிவிட்ட நிலையில், அதற்கான காரணம் பற்றி தெரியவில்லை. இஷாவுக்கு ஒரு காதலனும், 2 தோழிகளும் மிக நெருக்கமாக இருந்துள்ளனர். அடிக்கடி அவர்களுடன் போனில் பேசியுள்ளார். அவர்களிடம் போலீசார் துருவிதுருவி விசாரிக்கின்றனர். விரைவில் திருமணம் செய்துகொள்ளுமாறு இஷாவின் பெற்றோர் வற்புறுத்தி வந்ததாகவும் அந்த கோணத்திலும் விசாரணை நடப்பதாகவும் கூறப்படுகிறது.

« PREV
NEXT »

No comments