Latest News

September 14, 2015

சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய இராணுவ காப்பகம் திடீர் சோதனை
by admin - 0

இலங்கை இராணுவத்தினரால் நடாத்தி சென்ற செனேஹச குழந்தைகள் காப்பகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாகி வரும் நிகழ்வு தொடர்பில் ஆராய்வதற்காக இன்று காலை இராணுவ பொலிஸ் குழுவொன்று அவ்விடத்தில் அவசர சோதனைகளை ஆரம்பித்துள்ளது.

தேசிய பத்திரிகையினால் சமீபத்தில் இத் தகவல் வெளியாகியதனை தொடர்ந்து இது தொடர்பில் சமூகத்தின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. கொழும்பு நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் இக்குழந்தைகள் காப்பகம் அமைந்துள்ளதோடு, அங்கு இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் இதுவரை எவ்வித சோதனைகளும் இடம்பெறவில்லை.

எப்படியிருப்பினும் இராணுவ தளபதியின் அறிவுரைக்கமைய இதுவரையிலும் அவ்விடத்தின் நிர்வாகத்தினரிடம் வாக்குமூலம் பெற்றுகொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இலங்கை இராணுவம் நடத்தி வரும் செனேஹச சிறுவர் இல்லத்தில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து கண்டறிவதற்காக இன்று அதிகாலை இராணுவ காவற்துறை அணியொன்று சிறுவர் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தில் பணியாற்றுவோரின் குடும்பங்களை சேர்ந்த மூளை வளர்ச்சி குறைந்த சிறுவர்களை பராமரிப்பதற்காக இந்த சிறுவர் இல்லம் நடத்தப்பட்டு வருகிறது. அங்கிருந்த சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் கிருஷாந்த டி சில்வாவின் உத்தரவின் பேரில் சிறுவர் இல்லத்தை முற்றுகையிட்டுள்ள இராணுவ காவற்துறையினர் அங்குள்ள நிர்வாக அதிகாரிகளிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

« PREV
NEXT »

No comments