Latest News

September 11, 2015

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு CaFFE, ஸ்ரீலங்கா மனித உரிமைகள் நிலையம் கோரிக்கை!
by Unknown - 0

குற்றஞ்சுமத்தப்படாது சிறைத்தண்டனை அனுபவிக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CaFFE எனப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் நிலையம் ஆகியன ஒன்றிணைந்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.

ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக CaFFE அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல வருடங்களாக சிறைதண்டனை அனுபவிக்கும் அரசியல் கைதிகள் தொடர்பில் ஆராய்ந்து அவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அந்த அறிக்கையினூடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டும், தொடரப்படாமலும் 273 பேருக்கும் அதிகமானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் சுமார் 6 தொடக்கம் 7 வருடங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் இதுவரை வழக்குத்தாக்கல் செய்யப்படாமல் உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் CaFFE மற்றும் இலங்கை மனித உரிமைகள் நிலையம் ஆகியன விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments