Latest News

September 16, 2015

வரலாற்றில் முதன்முறையாக யாழில் சர்வதேச திரைப்பட விழா, நேற்று ஆரம்பம்.
by அகலினியன் - 0

வரலாற்றில் முதன்முறையாக யாழில் சர்வதேச திரைப்பட விழா, நேற்று ஆரம்பம்.

வரலாற்றில் முதன்முறையாக யாழில் சர்வதேச திரைப்பட விழா (Jaffna International Cinema Festival) நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 05.30க்கு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.
 
இந்த நிகழ்வு இன்று 16 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நடைபெற இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
 
இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் இருந்தும் சுமார் 45 வரையிலான கதைப் படங்கள் மற்றும் ஆவண படங்கள், குறும் திரைப்படங்கள் (45 Feature films including 12 debut films in competition, 10 documentaries and over 25 short films) இந்த சர்வதேச திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
 
சர்வதேச திரைப்பட விழாவில் சர்வதேச நாடுகளின் திரைப்பட துறையைச் சர்ந்த ஏழு கலை ஆளுமைகளும் தொடக்கி வைக்கப்படவுள்ளன.
 
இன்றைய தினம் “யூரோப்பியன் பனோரமாவின்” (EUROPEAN PANORAMA) ஆரம்ப திரைப்படமான பியோனெக்ஸ் 98 (2014) என்ற ஜேர்மனிய திரைப்படம் திரையிடப்படவிருக்கின்றது.
 
இந்த நிகழ்வின் இறுதிநாளின் முடிவுத்திரைப்படமாக சர்வதேச ரீதியில் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற இயக்குனர் லெனின் எம் சிவம் அவர்களுடைய "ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும்" A Gun & A Ring திரைப்படம் திரையிடப்பட இருக்கின்றது.
 
« PREV
NEXT »

No comments