Latest News

August 13, 2015

சுமந்திரனால் தயாரிக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை - யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்
by admin - 0

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பிரிவினர் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிக்குமாறு அறிக்கை ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும் வெளியிடப்பட்ட அறிக்கைக்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் எந்த தெடர்பும் இல்லை என்று ஒன்றியத்தில் தலைவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம், முகாமைத்துவ பீடத்தின் மாணவர்கள் ஒன்றிணைந்து இன்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தனர். அவ்வறிக்கையில் தாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினையே இத் தேர்தலில் ஆதரிப்பதாகவும், அவர்களுக்கே அனைவரும் வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் தற்காலத்தில் மாற்றம் என்று ஒன்று தேவையற்றது என்றும் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு வெளியிடப்பட் அறிக்கை தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்களிடம் விநாவிய போது இந்த அறிக்கையானது தயாரிக்கப்பட்டது தொடர்பாக எதுவும் தெரியாது என்றும், இவ்வறிக்கையினை முன்னின்று வெளியிட்டு வைத்த கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் தன்னிச்சையாக முடிவெடுத்தே இவ்வறிக்கையினை வெயிட்டுள்ளார்.

இவர் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு மாணவர்கள் சார்பில் தனக்கும் இடம் ஒன்று தருமாறு மாட்டின் வீதியில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்திற்குச் சென்று மாவை சேனாதிராஜாவிடம் கோரியிருந்தார்.

இருந்து போதும் மாவை சேனாதிராஜா அவருக்கு இடம் கொடுக்க மறுத்திருந்தார். இதன் பின்னர் சுமந்திரனிடம் இவர் இந்த கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் சுமந்திரன் தற்போதைய தேர்தலில் போட்டியிடுவதற்கானவர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், இனிவரும் காலங்களில் நடைபெறும், உள்ளுராட்சி சபை தேர்தல், மாநகச சபை தேர்தல், மாகாணசபை தேர்தல் போன்றவற்றில் போட்டியிடுவதற்கு வாய்பு தருவதாக உறுதியளித்துள்ளார்.

மேலும் இத் தேர்தலில் தமக்கான பிரசாரத்தினை முன்னெடுக்குமாறும் சுமந்திரன் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன்படி பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு சிலர் சுமந்திரனுக்கான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு அங்கமாகவே இவ்வறிக்கையும் திடீரென வெளியிடப்பட்டுள்ளது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் இவர்களால் வெளியிடப்பட் இவ்வறிக்கையும் சுமந்திரனால் தயாரிக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் உறுதிப்படுத்தும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் பரப்புரைகள் நிறைவடைவதற்கு நாளை நள்ளிரவு வரை காலம் உள்ள நிலையிலும் இன்று இவ்வறிக்கை வெளியிடப்பட்டது, இன்று சுமந்திரன் தொலைக்காட்சி ஒன்றின் நேரடி நிகழ்ச்சிக்காக கொழும்பிற்குச் சென்றுள்ளார்.

சுமந்திரன் யாழ்ப்பாண்தில் இல்லாத சமயம் இவ்வறிக்கை வெளியிடப்பட்டது, சுமந்திரனுக்கும் இவ்வறிக்கைக்கும் தொடர்பு எதுவும் இல்லை என்ற தோற்றப்பாட்டினை காட்டுவதற்காகவே இன்று இவ்வறிக்கை அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஆசனத்தினைக் கொடுகோரியிருந்தார்.
« PREV
NEXT »

No comments