Latest News

August 26, 2015

அநீதிகளை ஒழிப்போம்!!! வீறுகொண்டு எழு தமிழா!!!
by admin - 0

அநீதிகளை ஒழிப்போம்!!! வீறுகொண்டு எழு தமிழா!!!

"நிரந்தர தீர்வு நோக்கி" 

மீண்டும் தமிழ் இளைஞர் ஒன்றியத்தினர் சினிமா துறையினருக்கு எதிரான மாபெரும் கவனயீர்பு போராட்டத்திற்கான அழைப்பு!!!! அணிதிரள்வீர்!!

அனைத்து தமிழ் மக்களுக்கும் இனிய வணக்கங்கள் வரும் 04-09-2015 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு சினிமாத்துறையினருக்கு எதிரான போராட்டத்தை கரூர் மாவட்டத்தில் கரூர் மாவட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சந்திரமோகன் தலைமையில் தோழர்கள் திரள உள்ளனர்.

தமிழகத்தில் முதன் முதலாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை தமிழ் இளைஞர் ஒன்றியத்தினராகிய நாம் . சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் முன்னெடுத்திருந்தோம்.மது ஒழிப்புக்கும் சமூகசீர்கேட்டை திருத்துவதற்கும் இதுவே சிறந்த முறையென்றும் கலந்து கொண்ட பொதுமக்களில் சிலர் கருத்து தெரிவித்திருந்தார்கள். மேலும் சிலர் இப்போராட்டத்தை மாவட்டங்கள்தோறும் செய்யும் படியும் இளைஞர்களை சரியான பாதைக்கு இட்டு செல்லும்படியும் மக்கள் தங்கள் வேண்டுகோளையும் தோழர்களிடம் தெரிவித்துக்கொண்டனர்.அதன்படி மக்கள் நலனுக்கான எமது போராட்டம் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டங்களிலும்தொடரும்

சினிமாத்துறையினரிடமும் சின்னத்திரையினரிடமும் நாம் வைக்கும் கோரிக்கைகள்:

1.மது குடித்தல் புகைத்தல் போதைவஸ்து பாவிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம்.

2.கொலை,கொள்ளை,கற்பழிப்பு போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம்.

3.தவறான உறவுமுறைகளை கொண்ட கதைகளை படமெடுக்காதீர்கள்,நடிக்காதீர்கள்.

4.வன்முறைகளை ஊக்குவிக்கும் காட்சிகளை படமாக்காதீர்கள்,நடிக்கதீர்கள்.

5.தமிழில் நடிக்கும் படங்களில் தமிழர் கலாச்சாரத்தை சீரழிக்கும் ஆபாச காட்சிகளை தவிருங்கள்.

6.தமிழ் படங்களில் பிற மொழி கலந்த மொழிப்பயன்பாட்டை தவிருங்கள்.

எதிர்காலத்தில் இவற்றை மதிக்காமல் நடிப்போரை மக்கள் இனங்கண்டு சமூகத்தில் ஒதுக்க முன் வர 
வேண்டும்
ஏதிர்காலத்தில் இவர்களுக்கு எதிரான போராட்டங்களை எம்மோடு இணைந்து போராட முன் வரவேண்டும்.

ஆகவே தான் நாம் "நிரந்தர தீர்வு நோக்கி" எனும் தொனிப்பொருளில் தொடர்சியாக இப்போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் தமிழ் உணர்வாளர்களை அன்றைய நாள் அணிஅணியாக திரளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.இப்போராட்டத்திற்கு உங்கள் பங்களிப்பை செய்ய விரும்புவோர் படத்தில் உள்ள தொலைபேசி எண்களோடு தொடர்பு கொள்ளவும்.

நன்றி வணக்கம்.
தமிழ் இளைஞர் ஒன்றியம்.
தமிழுக்காக!!!என்றும் தமிழ் மக்களுக்காக!!!
« PREV
NEXT »

No comments