Latest News

August 19, 2015

அநீதிகளை ஒழிப்போம்!!! வீறுகொண்டு எழு தமிழா!!!
by admin - 0

அநீதிகளை ஒழிப்போம்!!! வீறுகொண்டு எழு தமிழா!!!
united-tamil-youth

சினிமா துறையினருக்கு எதிரான மாபெரும் கவனயீர்பு போராட்டத்திற்கான அழைப்பு!!!! அணிதிரள்வீர்!!

அனைத்து தமிழ் மக்களுக்கும் இனிய வணக்கங்கள் வரும் 21-08-2015 அன்று காலை 10 மணிக்கு சினிமாத்துறையினருக்கு எதிராக தமிழகத்தில் முதன் முதலாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை தமிழ் இளைஞர் ஒன்றியத்தினராகிய நாம் . சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் முன்னெடுக்க உள்ளோம். இன்று பல அமைப்புக்கள்,கட்சிகள் பல்வேறு தரப்பட்ட போராட்ட வடிவங்களாக மது கடைகள் உடைத்தல்,மது போத்தல்களை நொறுக்குதல்,மது ஆலைகள் முற்றுகை இப்படியான பல வடிவங்களில் முன்னெடுக்கின்றார்கள். முதலில் இப்படியான போராட்டங்களில் ஈடுபடும் தமிழ்தேசியவாதிகளுக்கு எமது இயக்கம் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படியான போராட்டங்கள் மூலமாக சம்மந்தப்பட்டவர்களுக்கு எமது எதிர்ப்பை தான் காட்ட முடியுமே தவிர நிரந்தர தீர்வை தரமாட்டாது. நாம் நிரந்தர தீர்வு நோக்கி போக வேண்டும் என்றால் இதற்கு காரணமான முக்கிய சக்திகளுக்கு எதிராக களமாடி வெற்றி பெறவேண்டும்.நிரந்த தீர்வு என்பது மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். இன்று மக்கள் மனங்களை இப்படியான தவறான பாதைக்கு இட்டு செல்வது இந்த சினிமா துறையே

இந்த சினிமாத்துறையினருக்கு எதிரான மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!!!

இன்றைய தமிழ் சமூகத்தின் சீரழிவுக்கும் உச்ச கட்ட மதுபாவணை நிலைக்கும் முக்கிய காரணம் சினிமாவும் சின்னதிரையுமே ஆகும். இன்றைய சிறுவயதினரில் இருந்து வயது சென்றவர் வரை அடிமைப்பட்டு கிடக்கும் ஓர் ஊடகம் தொலைக்காட்சி நெடுந்தொடர்களும் சினிமாவுமே ஆகும் .

இன்று பலர் மதுவுக்கு எதிராக பல்வேறு தரப்பட்ட போராட்டங்களை முன்னெடுக்கின்றார்கள். ஆகிலும் இன்றைய தலைமுறையை இப்படியான சீரழிவுக்குள் செல்ல தூண்டும் முக்கிய காரணியை எதிர்த்து இதுவரை யாரும்போராட முன் வரவில்லை. எனவே தான் தமிழ் இளைஞர் ஒன்றியத்தினராகிய நாம் “நிரந்தர தீர்வு நோக்கி” எனும் தொனிப்பொருளில் நாம் சினிமாத்துறையினருக்கு எதிராக களமிரங்கியிருக்கின்றோம்.

இன்றைய சினிமா முற்றிலும் எமது தமிழ் கலாச்சாரத்தை குழிதோண்டி புதைக்கும் வண்ணமாகவும் இளம் சமூதாயத்தை தவறான பாதைக்கு இட்டு செல்வதாகவுமே உள்ளது.இன்றைய இளைஞர்கள் சினிமா நடிகர்களையே தங்கள் முன்உதாரணமாக கொண்டு செயல்படும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஆதனால் அவர்கள் திரையில் என்ன செய்கின்றார்களோ அல்லது சொல்லுகின்றார்களோ அதையே தங்கள் நிஜ வாழ்க்கையிலும் செய்ய முயல்கிறார்கள்.

ஏன்றும் இல்லாதவாறு இப்போது அதிகரித்திருக்கும் மது பாவனை,புகைத்தல்,குழுமோதல்,கற்பழிப்பு,தகாதஉறவு,பெரியவர்களை மதிக்காமை,போதைபொருள் பாவனை,வன்முறைகள் எனும் பல சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் நல்லவை போல திரையில் தோன்றும் நடிகர்கள் தமது பிழைப்புக்காக தமிழ் சமூகத்தை சீரழிக்கின்றார்கள். இதற்கு சிறிய உதாரணமாக அண்மையில் கைது செய்யப்பட்ட திருடர்கள் தாம் குறித்த ஒரு படத்தை பார்த்து தான் திருட கற்றுகொண்டதாக காவல்துறைக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்கள்.அதே போல குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களும் தங்கள் குற்றத்திற்கு இதே காரணத்தையே முன் வைக்கின்றார்கள்.

இதற்கு அடுத்த இடத்தில் சின்னதிரையும் தமது பங்கிற்கு தமிழரின் கலாச்சாரத்தை நாசமாக்கின்றன.தமிழ் கலாச்சாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற மரபை உடைத்து இன்றய நெடுந்தொடர்களில் பல கணவன் , பல மனைவி அதுக்கு வேறு சாதகமான காரணம், கள்ளத்தொடர்பு இப்படியே திட்டமிட்டு தமிழ் மக்களின் மனங்களில் நஞ்சை விதைத்து கொண்டுள்ளனர் இதன் விளைவே இப்போது நாம்அறுவடை செய்கின்றோம். இப்போது தமிழர் பிரதேசமெங்கும் இப்படியான சமூகசீர்கேடுகள் அதிகரித்து காணப்படுகின்றது.

இப்படியான சீர்கேட்டை நிறுத்த விரும்பினால் தமிழ் மொழியில் வரும் திரைப்படங்களிலும் நெடுந்தொடர்களிலும் நடிக்கும் நடிகர்கள் தான் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் சமூகப் பொறுப்பான நடிகர்களாக இருந்தால் இப்படியான காட்சிகளில் நடிக்க முன்வரக்கூடாது. இனிவருங்காலத்தில் யார் சமூகப் பொறுப்புள்ள நடிகர்கள் என்று. தெரிய வரும். இதற்கு பிறகும் சமூகத்தை கெடுக்கும்வகையில் யாராவது சமூக விரோத நடிகர்கள் நடிப்பார்கள் என்றால் அவர்களுக்கு எதிரான பாரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கும் ஏனைய தமிழ் ஆர்வலர்களும் சமூகநலன் விரும்பிகளும் போராட முன் வரவேண்டும்.

சினிமாத்துறையினரிடமும் சின்னத்திரையினரிடமும் நாம் வைக்கும் கோரிக்கைகள்:

1.மது குடித்தல் புகைத்தல் போதைவஸ்து பாவிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம்

2.கொலை,கொள்ளை,கற்பழிப்பு போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம்

3.தவறான உறவுமுறைகளை கொண்ட கதைகளை படமெடுக்காதீர்கள்,நடிக்காதீர்கள்

4.வன்முறைகளை ஊக்குவிக்கும் காட்சிகளை படமாக்காதீர்கள்,நடிக்கதீர்கள்.

5.தமிழில் நடிக்கும் படங்களில் தமிழர் கலாச்சாரத்தை சீரழிக்கும் ஆபாச காட்சிகளை தவிருங்கள்.

6.தமிழ் படங்களில் பிற மொழி கலந்த மொழிப்பயன்பாட்டை தவிருங்கள்.

எதிர்காலத்தில் இவற்றை மதிக்காமல் நடிப்போரை மக்கள் இனங்கண்டு சமூகத்தில் ஒதுக்க முன் வர
வேண்டும்

ஏதிர்காலத்தில் இவர்களுக்கு எதிரான போராட்டங்களை எம்மோடு இணைந்து போராட முன் வரவேண்டும்.

ஆகவே தான் நாம் நிரந்தர தீர்வு நோக்கி எனும் தொனிப்பொருளில் 21-08-2015 மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் செய்கின்றோம். தமிழ் உணர்வாளர்களை அன்றைய நாள் அணிஅணியாக திரளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.இப்போராட்டத்திற்கு உங்கள் பங்களிப்பை செய்ய விரும்புவோர் படத்தில் உள்ள தொலைபேசி எண்களோடு தொடர்பு கொள்ளவும்.

நன்றி வணக்கம்.
தமிழ் இளைஞர் ஒன்றியம்.
தமிழுக்காக!!!என்றும் தமிழ் மக்களுக்காக!!!
« PREV
NEXT »

No comments