Latest News

August 06, 2015

குடியேற விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டிருந்தால், நாட்டை விட்டு வெளியேற்ற உடனடி நடவடிக்கை
by admin - 0

பிரித்தானியாவில் குடியேற விண்ணப்பம் செய்து அந்த விண்ணப்பங்கள் அரசால் நிராகரிக்கப்பட்டிருந்தால், குறிப்பிட்ட அந்த நபர்களை நாட்டை விட்டு வெளியேற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் குடியேற உரிய ஆவணங்களையும் காரணங்களையும் அரசிற்கு அளிக்க வேண்டும்.

ஆவணங்களும் காரணங்களும் அரசால் ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டால் அவர்களுக்கு அந்நாட்டில் குடியேறும் உரிமை அளிக்கப்பட மாட்டாது.

இருப்பினும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தாலும், சுமார் 10 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் தங்கியுள்ளதால் அவர்களுக்கு அரசு வாரம்தோறும் 36 பவுண்டுகள் நிதியுதவி அளித்து வந்தது.

ஆனால், பிரான்ஸ் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழையும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த நிலமையை கட்டுப்படுத்த அரசு ஒரு புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் பிரித்தானியாவில் தற்காலிகமாக தங்கியுள்ள புலம்பெயர்ந்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற அரசு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய புலம்பெயர்வு அமைச்சகத்தின் செயலாளரான கிரேக் கிலார்க், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட வெளிநாட்டினர்களை பிரித்தானியாவை சேர்ந்த வீட்டு உரிமையாளர்கள் சட்ட விரோதமாக இருப்பிடம் வழங்கி தங்க வைத்துள்ளனர்.

இனிமேல், வீட்டு உரிமையாளர்கள் அவர்களுக்கு தங்கும் வசதியை ஏற்படுத்தி தரக்கூடாது.

அரசின் சட்டங்களை மீறி வருமானம் ஈட்ட வேண்டும் என வீட்டு உரிமையாளர்கள் நினைத்து புலம்பெயர்ந்தவர்களுக்கு இருப்பிடம் வழங்கினால் உரிமையாளர்களுக்கு 4 வருடங்கள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புலம்பெயர்வு துறையின் அமைச்சரான ஜேம்ஸ் புரோகென்ஷைர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையிலும் பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர்கல் மீது இனி அரசு இரக்கம் காட்டாது.

அது போன்ற நபர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கும். அரசின் நடவடிக்கைகள் மற்றும் அறிவிப்புகளுக்கு எதிராக வீட்டு உரிமையாளர்கள் செயல்பட்டால் அவர்களுக்கு உடனடியாக கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

« PREV
NEXT »

No comments