Latest News

August 22, 2015

தடுப்புக்காவலில் சித்திரவதை-பொலிஸ் நிலையத்தில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட இருவர் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு
by Unknown - 0

மன்னார் முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, முருங்கன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட இரு சந்தேக நபர்களையும் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த மன்னார் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இசைமாளத்தாழ்வு கிராமத்தைச் சேர்ந்த இரு சந்தேக நபர்கள் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக கூறி நேற்று மாலை முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு முருங்கன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று இரவு 10.30 மணியளவில் முருங்கன் பொலிஸ் நிலையத்தின் கீழ் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த இரு சந்தேக நபர்களும் முருங்கன் பொலிஸ் நிலையத்தின் மேல் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் குறித்த இரு சந்தேக நபர்களும் கடுமையாக பொலிஸாரினால் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இரு சந்தேக நபர்களில் ஒருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.  இந்த நிலையில் குறித்த இரு சந்தேக நபர்களும் இன்று மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

குறித்த இரு சந்தேக நபர்கள் சார்பாகவும் சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிறாய்வா மற்றும் எம்.சதக்கத்துள்ளா ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

இதன் போது திருட்டுச் சம்பவத்துடன் தொடர்பு பாட்டதாக கூறி முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த இரு சந்தேக நபர்களும் முருங்கன் பொலிஸாரினால் கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும்,

குறித்த இரு சந்தேக நபர்களில் ஒருவரின் கண், முகம் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு வாய் உதட்டுப்பகுதியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதையும் சட்டத்தரணிகள் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த இரு சந்தேக நபர்களையும் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்து சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய அறிக்கையை பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறும்,

குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மீண்டும் இச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments