Latest News

August 09, 2015

திருமலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டம்
by admin - 0

திருகோணமலையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டம் 10ம் திகதி திங்கள் மாலை 6 மணிக்கு சிவன் கோவில் மண்டபத்தில் மாவட்ட அமைப்பாளர் ராஜகோண் ஹரிகரன் தலைமையில் நடை பெறவுள்ளது.

இக் கூட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைவரும் யாழ்மாவட்ட முதன்மை வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( இலக்கம் – 4) ,திருகோணமலை முதன்மை வேட்பாளர் இரா.ஞானேஸ்வரன்(இலக்கம்-2) , தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் யாழ் மாவட்டத்தில் இலக்கம் 10 இல் போட்டியிடும் வேட்பாளருமான செல்வராசாகஜேந்திரன் , திருகோணமலை முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் ரூபன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

« PREV
NEXT »

No comments