Latest News

August 16, 2015

கஜேந்திரகுமார் ஆஜராகவில்லை! - பிரபல மனித உரிமைச்சட்டத்தரணி இரட்ணவேல்
by admin - 0

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பத்திற்கு எதிராக எம்.ஏ.சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அப்பட்டமான பொய்யென பிரபல மனித உரிமைச்சட்டத்தரணி இரட்ணவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மயிலந்தனை என்ற கிராமத்தில் தமிழ் மக்களை சிறீலங்கா இராணுவம் கொலை செய்தது என்ற வழக்கில், ஜனாதிபதி சட்டத்தரணி தயா பெரேராவுடன் இணைந்து, இராணுவத்தினருக்கு சார்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வாதாடியதாக சுமந்திரன் ஆற்றிய உரை குற்றச்சாட்டை முன்வைத்து ஆற்றியிருந்த உரை யாழ்.தினக்குரல் பத்திரிகையினில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக மையிலந்தனை படுகொலை வழக்கு ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் முடிவடையும் வரை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பாக ஆஜரான சட்டத்தரணி. திரு. இரட்ணவடிவேல் அவர்கள் தெரிவித்துள்ள கருத்தின் படி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இந்த வழக்கில் ஒரு தடவையையும் ஆஜராகவில்லை.


'இந்த வழக்கின் அனைத்து தவணைகளின் போதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில் ஆஜரானவன் என்ற வகையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான அனைத்து சட்டத்தரணிகள் விபரமும் எனக்கு தெரிந்திருந்தது. அந்த அடிப்டையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் எந்தவொரு கட்டத்திலும் ஆஜராகவில்லையென்பதை திட்டவட்டமாகக் கூறுகிறேன்' என்றார் சட்டத்தரணி இரட்ணவடிவேல் அவர்கள். அத்துடன், இந்த வழக்கு முடிவடைந்தது 2002. ஆனால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் 2001 ல் நாடாளுமன்ற உறுப்பினரான பின்பு தனது சட்டத்தரணி தொழிலை செய்யவில்லை.

ஆகவே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஒரு அப்பட்டமான பொய். இதனை நிரூபிப்பதற்கு நான் எந்த நீதிமன்றத்திலும் சமூகம் அளிக்க தயாரெனவும் பிரபல மனித உரிமைச் சட்டத்தரணி இரட்ணவேல் அவர்கள் தெரிவித்தார்.

பிரபல மனித உரிமைச் சட்டத்தரணியான இரட்ணவேல் அவர்கள், தமிழ் மக்களுக்கு எதிரான பயங்கரவாதச் தடைச்சட்டம் மற்றும் அவசர காலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை விடுவிப்பதற்காகவும், தமிழ் மக்களின் நீதிக்காகவும் தொடர்ச்சியாக துணிந்து குரல்கொடுத்து வருபவர்.அத்துடன் இறுதி யுத்தத்தினில் சரண் அடைந்து காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான வழக்கினிலும் இவரே ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 
« PREV
NEXT »

No comments