Latest News

August 19, 2015

ஈழத்திற்கான அவசியத்தை இலங்கை தேர்தல் முடிவுகள் காட்டிவிட்டன
by admin - 0

eelam
இலங்கைத் பாரா­ளு­மன்றத் தேர்தல் முடி வால் தமி­ழர்க்கு எந்த பயனும் இல்லை,

ஈழமே தீர்வு என பா.ம.க.நிறு­வனர் ராம தாஸ் தெரி­வித்­துள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

நேற்று முன்­தினம் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்தல் முடி­வுகள் வெளி­யா­கி­யுள்­ளன. எந்த கட்­சியும் ஆட்­சி­ய­மைக்கும் அள­வுக்கு பெரும்­பான்மை பெற­வில்லை.

எனினும், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட கட்­சி­களின் ஆத­ர­வுடன் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ரா­வது உறு­தி­யா­கி­விட்­டது.
ஜனா­தி­பதி தேர்­தலில் தோல்­வி­ய­டைந்து பத­வியை பறி­கொ­டுத்த நிலையில், பிர­தமர் பத­வியைக் கைப்­பற்­றலாம் என்று எண்­ணத்தில் காய் நகர்த்­திய ராஜ­ப­க் ஷவின் கன­வு­களும் கலைந்துவிட்­டன.

தமது தோல்­வியை ஒப்­புக்­கொண்­டுள்ள ராஜ­பக் ஷ எதிர்க்­கட்சி உறுப்­பி­ன­ராக செயல்­படப் போவ­தாக அறி­வித்­துள்ளார்.
வழக்கம் போலவே தமி­ழர்கள் அதிகம் வாழும் பகு­தி­களில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அதிக வாக்­கு­களைக் கைப்­பற்­றி­யுள்­ளது. 15க்கும் மேற்­பட்ட இடங்கள் அக்­கட்­சிக்கு கிடைக்­கக்­கூடும்.

தேர்­தலில் தமி­ழர்­க­ளுக்கு சாத­க­மான அம்சம் ஏதேனும் உண்டு என்றால், அது முன்னாள் அதிபர் ராஜபக் ஷக்கு ஏற்­பட்ட தோல்­விதான்.
ஜனா­தி­ப­தி­யாக இருந்த போது அப்­பாவித் தமி­ழர்­களை படு­கொலை செய்த ராஜ­பக்­சஷ மீண்டும் பிர­த­ம­ரானால், அதி­கா­ரத்தை கையில் எடுத்துக் கொண்டு தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக செயல்­ப­டுவார் என்று தமி­ழர்கள் அஞ்­சினர்.
இத்­த­கைய சூழலில் ராஜ­பக் ஷ தோல்­வி­ய­டைந்­தி­ருப்­பது தமி­ழர்­க­ளுக்கு ஓர­ளவு நிம்­ம­தியைத் தந்­துள்­ளது. இதைத் தவிர வேறு எந்த நன்­மையும் ஈழத் தமி­ழர்­க­ளுக்கு ஏற்­ப­டப்­போ­வ­தில்லை என்­பது தான் உண்­மை­யாகும்.
தேர்தல் முடி­வுகள் உல­கத்­திற்கு சொல்லும் பாடம் என்­ன­வெனில், அந்­நாட்டில் சிங்­கள இனத்­த­வரும், தமி­ழர்­களும் ஒற்­று­மை­யாக வாழ முடி­யாது என்­ப­துதான்.

இந்தத் தேர்­தலில் ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அணியும், விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அணியும் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரா­கவும், சிங்­கள இன­வெ­றியை தூண்டும் வகை­யிலும் பரப்­புரை மேற்­கொண்­டன. இதன் பய­னாக சிங்­க­ள­வர்கள் வாக்­கு­களை இரு கட்­சி­களும் சரி­ச­ம­மாக பகிர்ந்து கொண்­டனர். அதேபோல் தமி­ழர்கள் அதிகம் வாழும் பகு­தி­களில் தமிழர் தேசிய கூட்­ட­மைப்­புதான் பெரும்­பான்மை இடங்­களைக் கைப்­பற்­றி­யுள்­ளது.

இதன்­மூலம் சிங்­க­ள­வர்­களை ஆத­ரிக்கத் தயா­ரில்லை என்­பதை தமி­ழர்­களும், தமி­ழர்­க­ளுக்கு அதி­காரம் வழங்கத் தயாராக இல்லை என்பதை சிங்களவர்களும் மீண் டும் ஒரு முறை தெரிவித்திருக்கின்றனர்.
இதே நிலை தொடர்ந்தால் தமிழர்கள் தொடர்ந்து கொத்தடிமைகளாகவே வாழ நேரிடும். இதன்பிறகும் இரு இனத்தினரும் ஒன்றாக வாழ்வது பொருந்தா கூட்டணி யாகவே இருக்கும்.
« PREV
NEXT »

No comments