Latest News

August 10, 2015

சுமந்திரன் கலம் மக்ரேயை பொய்யராக்க முயலுகின்றார்?
by admin - 0

நேற்று 06.08.2015 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சுமந்திரன் அவர்கள் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதில் பல உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் இருப்பினும், குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் உள்ளக விசாரணை பற்றி கசிந்தாக கலம் மக்ரே அவர்கள் கூறிய செய்தியை மறுதலித்தமையானது மிக பாரிய துரோகத்தின் மற்றுமொரு வெளிப்பாடாகும்.

இதில் பல விடையங்கள் உள்ளடங்கி இருக்கின்றது.

1. கலம் மக்ரே அவர்கள் கூறிய உள்ளக விசாரணை பற்றி கசிந்துள்ள செய்தியானது, பொய் என்றும் திரிவு படுத்தப்பட்டது என்றும் கூறியமையின் மூலம், கலம் மக்ரே அவர்கள் மீதான நம்பகத்தன்மைய தமிழர்கள் மத்தியிலும் சர்வதேசத்தின் மத்தியிலும் கேள்விக் குறியாக்க முயன்றுள்ளார்.

இதன் மூலம் இன்று உலகத்தமிழர்கள் அனைவரும் தமிழரின் இனவழிப்புக்கு கிடைத்த சான்றுகளில் முக்கியமாக கருதப்படும் கலம் மக்ரேயின் ஆவணப்படங்கள் கூட பொய்யானதாக இருக்கலாம் என தமிழ் மக்களையும் சர்வதேசத்தினையும் எண்ண வைக்க முயல்கின்றார். இது மிகவும் ஆபத்தான விடையமாகும்.

எப்படி ராஜபக்சா ஆட்சியின் போது எப்படி கலம் மக்ரே அவர்களின் ஆவணப்படத்தினை பொய்யானதென்றும் கலம் மக்ரே பொய்யரென்றும் சிங்கள தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் காண்பிக்க முயன்றாரோ, அதே பாணியில் தற்போது சுமந்திரன் செயற்பட்டுள்ளார்.


2. உண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் வெளியாக உள்ள அறிக்கையானது தனக்கும் தெரியும் என்ற பாணியில் கூறி தனக்கு எல்லாம் தெரியும் மற்றவர்கள் முட்டாள்கள் என்று காட்ட முனைந்துள்ளார். ஆனால் உண்மையில் சுமந்திரனுக்கு எதுவும் தெரியாது என்பதுடன் தான் மக்கள் முன் காட்டும் வேடம் கலைந்து போகக்கூடாது என்பதற்காக இப்படியான அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
எந்த கேள்விகளுக்கும் பதில் ஒன்றினை வைத்துக்கொண்டு அதுதான் சரியென்றும் நிறுவ முயல்கின்றார்.

சுமந்திரன் அவர்கள் மார்ச்7, 2015 அன்று ஜெனீவா சென்று சிறிலங்கா எமது நாடு என்றும் எமக்கு உள்ளக விசாரணையே போதுமானது என்றும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் அறிக்கையினை தேர்தலின் பின்னர் வெளியிடுமாறும், சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை தானும் தெரிவித்து விட்டு வந்திருந்தார்.

கலம் மக்ரே அவர்களின் செய்தி உண்மையானது என்றால், தான் மார்ச்7, 2015 அன்று ஜெனீவாவில் தெரித்த தனது நிலைப்பாடு வெளியில் தெரிந்துவிட்டது என்ற பயத்திலும், இதில் தனது தேர்தல் வெற்றி பாதிக்கப்பட்டு விடும் என்ற பயத்தினாலேயே அதனை பொய்யென்றும் அது பற்றி தனக்கு அனைத்துமே தெரியும் என்ற பாணியில் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இவர் இன்னொரு கதிர்காமராக தன்னை காண்பிக்க முயல்கின்றார். தமிழ் மக்களை முட்டாள்கள் ஆக்கி, தான் சொன்னதை எல்லாம் மக்கள் நம்பி விடுவார்கள். இதன் மூலம் தேர்தலில் வென்று விட்டால், சிறிலங்கா அரசுடன் சேர்ந்து அமைச்சுப் பதவிகளை எடுத்து தனது விசுவாசத்தினை சிங்களத்திற்கு காட்டி தனது அரசியல் இருப்பை நிலை நிறுத்த முயல்னின்றார்.

எனவே இப்படியான துரோகத்தனத்திற்கு மக்கள் இடம் கொடுக்காது சுமந்திரனை அரசியலில் இருந்தே தூக்கி எறிய வேண்டும்.

-ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.

« PREV
NEXT »

No comments