Latest News

August 14, 2015

இலங்கைத் தேர்தலில் சமுக வலைத்தளங்கள்!
by Unknown - 0

தெற்காசியாவில் இணையப் பரவலும், சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியும் மிகவும் அதிகமாக இருக்கும் இலங்கையில், தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களின் தாக்கம் கணிசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைத் தேர்தல் ஆணைய விதிகளின்படி வாக்களிப்பு துவங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக அனைத்துவிதமான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் நிறுத்தப்படவேண்டும்.

இலங்கைத் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலிலும் பிரச்சாரத்தின் இறுதி கட்டத்தில் இலங்கையில் இருக்கும் ஊடகங்களுக்கு இந்த விதியை நினைவுபடுத்தி அறிக்கை விடுவது வாடிக்கை.

வழமையாக அச்சு ஊடகம், வானொலி, தொலைக்காட்சிகள் என்பவற்றுக்கு இத்தகைய அறிவுரையை வழங்கிவந்த இலங்கைத் தேர்தல் ஆணையம், இந்த முறை அந்த பட்டியலில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.

எனவே அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் அவர் தம் ஆதரவாளர்கள் இந்த 48 மணி நேர பிரச்சாரத் தடை என்கிற தேர்தல் ஆணையக் கட்டுப்பாட்டை முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் கடைபிடிக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இலங்கை அரசியலில் அதிகரித்துவரும் சமூக ஊடகங்களின் தாக்கத்துக்கு இந்த அறிவிப்பு மற்றும் ஒரு உதாரணம்.

இலங்கை அரசியல் கட்சிகள் சமூக ஊடகங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டன

இலங்கைத் தேர்தல் ஆணையத்தைவிட இலங்கையின் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அவர் தம் ஆதரவாளர்கள் இந்த சமூக வலைத்தளங்களின் வல்லமையை ஏற்கனவே உணரத்துவங்கி விட்டனர்.

குறிப்பாக கடந்த ஜனவரியில் நடந்து முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் சமூக வலைத்தளங்கள் முதல்முறையாக குறிப்பிடத்தக்க முக்கிய பங்காற்றியதாக பார்க்கப்படுகிறது.

தென்னிலங்கையின் இளம் தலைமுறை வாக்காளர்களிடம் மகிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கைக் குறைப்பதில் சமூக வலைத்தளங்கள் கணிசமான பங்களிப்பைச் செய்ததாக விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக, இலங்கையின் தற்போதைய நடாளுமன்றத் தேர்தலிலும் சமூக வலைத்தளங்கள் கணிசமான பங்களிப்பை ஆற்றும் என்கிறார் யாழ்ப் பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் குமாரவடிவேல் குருபரன்.

"சுமார் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் சமூக ஊடக பயன்பாட்டாளர்கள்"

குறிப்பாக, இலங்கையின் வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் மொத்தமுள்ள ஆறு லட்சம் வாக்காளர்களில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வாக்காளர்கள் 40 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் கையடக்கத் தொலைபேசி மூலம் இணையத்தையும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்துபவர்கள் என்றும் கூறுகிறார் குருபரன்.

அதாவது மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள், மரபுரீதியிலான ஊடகங்களையும் தாண்டி முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக அரசியல் தகவல் பரிமாற்றம் செய்பவர்களாகவும், விவாதத்தில் ஈடுபடுபவர்களாகவும், பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கிறாரகள்.

வயதில் இளையவர்களாகவும், பொதுவில் மற்றவர்களைவிட மாற்றத்துக்கு தயாராக இருப்பவர்களாகவும் இந்த 40 வயதுக்கும் குறைவானவர்கள் இருப்பார்கள் என்பதால் இத்தகையவர்களை குறிவைத்து தம் பக்கம் ஈர்ப்பதில் இலங்கையின் எல்லா பிரதான அரசியல் கட்சிகளும் ஈடுபட்டிருக்கின்றன என்கிறார் குருபரன்.

தென்னிலங்கையின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இந்த துறையில் நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்களை சம்பளத்துக்கு அமர்த்தி தத்தமது சமூக வலைத்தள பிரச்சாரத்தை முன்னெடுப்பதாகவும், ஆனால் தமிழ்க் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் தம் தரப்பு சமூக வலைத்தள பிரச்சாரங்களை பெருமளவு தமது ஆதரவாளர்களைக் கொண்டே நடத்துகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

"தேர்தல் நேர பிரச்சார ஊடகமாக மட்டுமே இவை பார்க்கப்படுகின்றன"

அதேசமயம், இலங்கையின் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் சமூக வலைத்தளங்களை தேர்தல் நேரத்துக்கான ஒரு விளம்பர ஊடகமாக மட்டுமே பார்க்கிறார்களே தவிர, சமூக வலைத்தளங்களின் அடிப்படை இயல்பையோ, அதன் இயங்கியலையோ முழுமையாக புரிந்துகொண்டு, அதைத் தொடர்ச்சியாக தமது ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்களுடனான தொடர்பாடலுக்கு பயன்படுத்தப் பழகவில்லை என்கிறார் குருபரன்.
இலங்கை அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, இலங்கைத் தேர்தல் ஆணையத்திற்கும் கூட சமூக வலைத்தளங்களை எப்படிக் கையாள்வது என்பது சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது.

குறிப்பாக, தேர்தலில் வாக்களிப்பு துவங்குவதற்கு முன்பு 48 மணி நேரம் எந்தவித தேர்தல் பிரச்சாரமும் செய்யக்கூடாது என்கிற விதி சமூக வலைத்தளங்களுக்கும் பொருந்தும் என்று அறிவித்துள்ள இலங்கைத் தேர்தல் ஆணையத்துக்கு அதை சமூக வலைத்தளங்களில் எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது.

இணையமும், சமூக வலைத்தளங்களும் நாட்டு எல்லைகளுக்குக் கட்டுப்படாமல் உலகு தழுவிய அளவில் இயங்கத்தக்கவை என்கிற நிலையில் இலங்கைத் தேர்தல் ஆணையத்தால் இவற்றைக் கண்காணிப்பதும் கடினம். தனது தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்அதேசமயம், சமூக வலைத்தளங்களின் தாக்கம்இலங்கை அரசியலில் தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது என்பதற்கு இந்த நாடாளுமன்றத் தேர்தல் மேலும் ஒரு சாட்சி என்கிறார் குருபரன். இலங்கையின் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் இதற்கு செலவுசெய்யும் பணத்தையும் நேரத்தையும் பார்க்கும்போது அது உண்மை என்றே தோன்றுகிறது.

இந்தத் தேர்தல் முடிவுகள் இலங்கை அரசியலில் சமூக வலைத்தளங்களின் உண்மையான தாக்கத்தின் அளவு/எல்லை என்ன என்பதை குறிப்புணர்த்தக்கூடும். குறிப்பாக இலங்கைத் தமிழ்க் கட்சிகளுக்கும் அவற்றின் பழைய/புதிய தலைமைகளுக்கும்.பது என்பது அதைவிட கடினம்.


நன்றி பிபிசி தமிழ் 
« PREV
NEXT »

No comments