Latest News

August 20, 2015

புதிதாக மத்தியில் அமையும் அரசாங்கத்தில்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ளக் கூடாது
by admin - 0

இலங்கையில் புதிதாக மத்தியில் அமையும் அரசாங்கத்தில்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ளக் கூடாதென கூட்டமைப்பின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான எம்.கே.சிவாஐpலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலையே சிவாஐpலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்தச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே தமிழ் மக்கள் ஒட்டுமொத்த ஆணையை வழங்கியிருக்கின்றனர். தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதற்காக மக்கள் வழங்கிய ஆணையை மதித்து அந்த மக்களின் பிரச்சனையைத் தீரக்க வேண்டியது மிக அவசியமாகும்.

இந்தத் தேர்தலில் பிரதான எந்தக் கட்சியும் பெரும்பான்மைப் பலத்தைப் பெறவில்லை. இந்த இரு பிரதான கட்சிகளும் கூட்டமைப்பு முன்வைத்த இனப்பிரச்சனைக்கான தீர்வை மறுதலித்து அதனை எதிர்த்திருந்தனர். இந் நிலையிலையே கூட்டமைப்பின் ஆதரவு அவர்களுக்குது; தேவைப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் இங்குள்ள பிரதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை அமைக்கவுள்ளது. இதில் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கத்தை அமைக்குமு; வகையில் கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று கடந்த 1965 ஆம் ஆண்டும் ஐக்கிய தேசியக் கட்சியினால் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இதற்கும் தமிழ்க் கட்சிகளின் ஆதரவு கேட்கப்பட்டதற்கமைய ஆதரவு வழங்கியிருந்த நிலையில் தமிழ்க் கட்சிகள் கோரிய எதனையுமே அந்த அரசாங்ககங்கள் செய்யாத நிலையில் அதிலிருந்து தமிழ்க் கட்சிகள் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதாவது மத்தியில் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான அழைப்பு 1965 ம் அண்டு இதே ஐ.தே.கட்சியினால் உருவாக்கப்பட்டு டட்லி சேனநாயக்கா தலமையில் கொண்டுவரப்பட்ட டட்லி செல்வா ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு 7 கட்சிகள் சேர்ந்து தேசிய அரசாங்கத்தை அமைத்தார்கள்.

அதில் மாவட்ட சபைகளை அமைக்கும் ஒப்பந்தத்தைக் கூட அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறியது. கடைசியாக திருகோணமலை ஆலயத்தை புனித பகுதியாக பிரகடனம் செய்யுங்கள், என கேட்டார்கள் அதுவும் செய்யப்படவில்லை. இவ்வாறு எதுவும் செய்யாத நிலையில் வெளியேறிய நிலையே இருக்கின்றது. ஆகவே இந்த முறையும் தேசிய அரசில் கூட்டமைப்பு அங்கம் வகிக்கக் கூடாது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தீர்க்கப்படும் வரையில் தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்கக் கூடாது. அவ்வாறு எதிர்க்கட்சியாக வெளியில் இருந்து கொண்டு ஆதரவு வழங்குவது என்றாலும்  நிபந்தனைகளுடன் கால வரையறையுடன் கூடிய ஆதரவை வழங்குவது தொடர்பிலும் பரிசீலிக்கலாம்.

இலங்கைக்குள் அரசாங்கம் தீர்வைத் தருமென்று ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது. சர்வதேச ஆதரவுடன் சர்வதேச நாடுகளின் உதவியுடன் தான் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கும் ஆட்சியாளர்கள் சம்மதிக்காத போது ஐ.நா உதவியுடன் பொது வாக்ககெடுப்பொன்றை நடத்தி தீர்வை வழங்க வேண்டும் என்றும் சிவாஐpலிங்கம் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments