Latest News

August 06, 2015

காந்தி கொலையாளிகளை விடுவிக்கும் போது, ராஜீவ் கொலையாளிகளை ஏன் விடுவிக்கக்கூடாது.. தமிழக அரசு வாதம்
by admin - 0

டெல்லி : காந்தி கொலையாளிகள் விடுவிக்கப்படும் போது ராஜீவ்காந்தி கொலையாளிகளை ஏன் விடுவிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது.
vivasaayi news

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, 4 வது நாளாக தனது வாதத்தை எடுத்துரைத்தார். அப்போது அவர், காந்தி கொலையாளிகள் விடுவிக்கப்படும் போது, ராஜீவ் கொலையாளிகளை ஏன் விடுவிக்கக்கூடாது என்று வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு வழக்கறிஞர் ராகேஷ் திவேதியிடம் சில கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

குற்றவாளிகளின் குடும்ப சூழலைக் கருத்தில் கொண்டோ அல்லது குற்றவாளியின் நன்னடத்தைகளைக் கருத்தில்கொண்டோ விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், அதே நேரம் மாநில அரசு தகுந்த அரசின் அல்லது நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற வேண்டியதை கட்டாயமாக்கலாமா என்று கேள்வி எழுப்பினர்.

ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோர் ஏற்கனவே இரண்டு முறை தண்டனைக் குறைப்பு பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்நிலையில் மூன்றாவது முறை தண்டனை குறைப்பு அளிக்க மாநில அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்
« PREV
NEXT »

No comments