Latest News

August 11, 2015

மைத்திரியை சிறைப்பிடிக்கும் மகிந்த திட்டம் கசிந்தது?- மைத்திரி பாதுகாப்பு பிரிவு முற்றாக மாற்றப்பட்டது
by admin - 0

indian_armyசிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவு (Presidential Security Division – PSD) முற்றாக கலைக்கப்பட்டுள்ளதாக பொது ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களில் அதிபர் பாதுகாப்புப் பிரிவு ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டாலும் இந்த நடவடிக்கையின் பின்னால் மகிந்த உள்ளதாக இரகசிய தகவல் தெரிவிக்கின்றன.

அதாவது மகிந்த ஜனாதிபதியாக இருக்கும் போது இருந்த பாதுகாப்பு படையினரே மைத்திரியின் பாதுகாப்புக்கும் பொறுப்பாக இருந்துள்ளனர். அவர்கள் அணைவருமே இன்றுவரை மகிந்த விசுவாசிகளாகவே இருக்கிறார்கள். 

அத்துடன் மகிந்த வரும் நாடளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் சூழ்நிலையில் அவருக்கு பிரதமர் பதவியை மைத்திரி வழங்க மறுத்தால் ஶ்ரீலங்கா ஜனாதிபதியை வீட்டுக்காவலில் வைத்து தனது திட்டத்தை  நிறைவேற்ற மகிந்த தரப்பு ஈடுபடலாம் அதற்கு தனது விசுவாசிகளை மகிந்த பயன்படுத்தலாம் என்ற வல்லரசு ஒன்றின் புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்றதால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மைத்திரியின் பாதுகாப்பை சிறப்பு அதிரடிப்படை காவற்துறை பிரிவு கையில் எடுத்துள்ளது . இராணுவத்தில் மகிந்த விசுவாசிகள் அதிகம் என்பதால் அவர்களை நம்ப முடியாததால் இந்த திடீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.



5000 பேரைக் கொண்ட பலம் வாய்ந்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டு, அதில் பணியாற்றிய காவற்துறையினர் இடமாற்றப்பட்டுள்ளனர் ஆனால் பணியாற்றிய இராணுவத்தினர் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.

அத்துடன் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறப்பாக இருந்த மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்கவுக்கு வேறு பதவி ஒன்று வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் மகிந்த குழப்பமடைந்துள்ளதாகவும் தனது திட்டம் கசிந்தால் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன 
« PREV
NEXT »

No comments