Latest News

August 05, 2015

ரீ யூனியன் தீவில் கிடைத்த பாகம், எம்எச் 370 விமானத்தினுடையது!
by Unknown - 0

ரீ யூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் இறக்கையின் பாகம், காணாமல் போன எம்எச் 370 விமானத்தினுடையது என மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த பாகங்களை ஃப்ரான்ஸில் ஆராய்ந்த சர்வதேச ஆய்வாளர்கள், அவை எம்எச் 370யினுடையது என "முடிவாக உறுதிப்படுத்தியுள்ளதாக" நஜீப் ரஸாக் தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குச் சென்றுகொண்டிருந்த மலேசியன் எர்லைன்ஸிற்குச் சொந்தமான எம்எச் 370 விமானம், காணாமல் போனது.

ரீ யூனியன் தீவில் சில நாட்களுக்கு முன்பாக கிடைத்த விமான பாகங்கள் ஃப்ரான்சின் தௌலூசில் ஆராயப்பட்டன.
« PREV
NEXT »

No comments