Latest News

August 28, 2015

ரவிக்கு நிதி, அகி­ல­வுக்கு கல்வி, ஹரீ­னுக்கு தொலைத்­தொ­டர்பு, திகா­வுக்கு தோ.உட்­கட்­ட­மைப்பு?
by admin - 0

ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து அமைக்­க­வுள்ள தேசிய அர­சாங்­கத்தின் அமைச்சுப் பத­வி­களை யாருக்கு வழங்­குதல் மற்றும் அமைச்­சுக்­க­ளுக்­கான இலாகா ஒதுக்­கீ­டு­களை ஒழுங்­க­மைத்தல் என்­பன தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றன.

குறிப்­பாக ஐக்­கிய தேசிய கட்­சி­யிலும் சுதந்­திரக் கட்­சி­யிலும் அமைச்சுப் பத­வி­களை யாருக்கு வழங்­கு­வது என்­பது தொடர்பில் இரண்டு தரப்­பிலும் குழுக்கள் அமைக்­கப்­பட்டு ஆரா­யப்­பட்­டு­வ­ரு­கின்­றது.

இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து அமைக்­க­வுள்ள தேசிய அர­சாங்­கத்தின் புதிய அமைச்­ச­ரவை எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 2 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் பத­வி­யேற்­க­வுள்­ள­தாக அறிவிக்கப்பட்ட போதும் தற்போது செப்­டெம்பர் நான்காம் திகதி அமைச்­ச­ரவை பத­வி­யேற்பு இடம்­பெ­றலாம் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தேசிய அர­சாங்­கத்தில் 45 அமைச்­ச­ரவை அமைச்­சுக்­களும் 45 பிரதி மற்றும் இரா­ஜாங்க அமைச்­சுக்­களும் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளன. 45 அமைச்­ச­ரவை அமைச்­சுக்­களில் 30 அமைச்சுப் பத­விகள் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் 15 அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­ப­டு­வ­தற்கு இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு உயர்­கல்வி நீர்ப்­பா­சனம் விவ­சாயம் நெடுஞ்­சா­லைகள் சமுர்த்தி உள்­ளிட்ட அமைச்சுப் பத­வி­களை வழ­ங­கு­வ­தற்கு இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை ஐக்­கிய தேசிய கட்­சிக்­குள்ளும் எவ்­வாறு அமைச்சுப் பத­வி­களை பகிர்­வது என்­பது தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. சம்­பிக்க ரண­வக்­க­வுக்கு மெகா பொலிஸ் என்ற அமைச்சு பதவி வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மெகா பொலிஸ் என்­பது பாரிய நக­ரங்­களை அபி­வி­ருத்தி செய்யும் மெகா அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டத்தை குறிப்­ப­தாகும்.

மேலும் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு நிதி­ய­மைச்சு வழங்­கப்­ப­ட­வுள்ள நிலையில் ஐக்­கிய தேசிய கட்­சியின் பொதுச் செய­லாளர் கபிர் ஹஷீ­முக்கு வங்கி மற்றும் நிதி என்ற அமைச்சு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அத்­துடன் ஐக்­கிய தேசிய கட்­சியின் தவி­சாளர் மலிக் சம­ர­விக்­ர­ம­வுக்கு வெளி­நாட்டு முத­லீட்டு அமைச்சு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. முன்­னைய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் இரா­ஜாங்க பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்த ருவன் விஜ­ய­வர்த்­த­ன­வுக்கு மக்கள் சமா­தானம் பாது­காப்பு என்ற அமைச்சுப் பதவி வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

நெடுஞ்­சா­லைகள் அமைச்­ச­ராக லக்ஷ்மன் கிரி­யெல்­லவும் தொலைத்­தொ­டர்பு அமைச்­ச­ராக ஹரின் பெர்­ணான்­டோவும் வீட­மைப்பு மற்றும் நிர்­மா­ணத்­துறை அமைச்­ச­ராக சஜித் பிரே­ம­தா­ஸவும் கல்வி அமைச்­ச­ராக அகில விராஜ் காரி­ய­வ­சமும் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

அத்­துடன் துறை­மு­கங்கள் மற்றும் கப்பல் போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ராக அர்­ஜுன ரண­துங்­கவும் சுகா­தார அமைச்­ச­ராக ராஜித சேனா­ரத்­னவும் புத்த சாசன அமைச்­ச­ராக எம்.கே.டி.ஏ.எஸ். குண­வர்­த­னவும் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

மேலும் சுற்­று­லாத்­துறை அமைச்­ச­ராக நவின் திஸா­நா­யக்­கவும் உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ராக வஜித அபே­வர்­த­னவும் பெருந்­தோட்டக் கைத்­தொழில் அமைச்­ச­ராக கயந்த கரு­ணா­தி­லக்­கவும் எரி­சக்தி அமைச்­ச­ராக ஜோன் அம­ர­துங்­கவும் ஊட­கத்­துறை அமைச்­ச­ராக சாகல ரத்­ணா­யக்­கவும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு மற்றும் வீட­மைப்பு அமைச்­ச­ராக பழனி திகாம்­ப­ரமும் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

சுதேச மருத்­து­வத்­துறை அமைச்­ச­ராக எஸ்.பீ.நாவின்­னவும் போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ராக நிமல் சிறி­பால டி சில்­வாவும் விவ­சாய அமைச்­ச­ராக துமிந்த திஸா­நா­யக்­கவும் உயர் கல்வி அமைச்­ச­ராக கலா­நிதி சரத் அமு­னு­க­மவும் நிய­மிக்­கப்­ப­டலாம் என்றும் ஆளும் மற்றும் எதிர்க்­கட்சி வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன எனினும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவது தொடர்பாக உண்மையான விபரங்களை பெறமுடியவில்லை.

இவ்­வாறு ஐக்­கிய தேசிய கட்­சி­யிலும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யிலும் எவ்­வாறு அமைச்சுப் பத­வி­களை பகிர்­வது என்­பது தொடர்பில் தொடர்ச்­சி­யாக பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டு­வ­ரு­கின்­றன.

தேசிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ர­வையின் அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையை 45 ஆக உயர்த்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தா­லேயே அமைச்­ச­ரவை பத­வி­யேற்பை ஒரு வாரத்­துக்கு பிற்­போ­ட­வேண்­டி­யேற்­பட்­டுள்­ளது. அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் பிர­காரம் அமைச்­ச­ரவை அமைச்­சர்­களின் எண­ணிக்கை 30 ஐ விட அதி­க­ரிக்­கப்­ப­டு­மாயின் அதற்கு பாரா­ளு­மன்­றத்தின் அனு­மதி பெறப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது.
Srilanka

எனவே செப்­டெம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள முதலாவது பாராளுமன்ற அமர்வில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான யோசனையை நிறைவேற்றிவிட்டு இரண்டாம் திகதி அமைச்சரவையை நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 106 ஆசனங்களை பெற்று வெற்றியீட்டியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களையே பெற்றது. இந்நிலையில் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக ஐக்கிய தேசிய கட்சியினால் தனித்து ஆட்சியமைக்க முடியுமாக இருந்தும் தேசிய அரசாஙகம் அமைப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.
« PREV
NEXT »

No comments