Latest News

August 12, 2015

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
by admin - 0

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. எந்தவிதமான அச்சமும் இல்லாமல் அனைத்து மக்களும் வாக்களிக்கலாம் என்று தெரிவத்தாட்சி அலுவலகர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 5 இலட்சத்தி 29 ஆயிரத்து 239 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக காக 526 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சில வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நிலையங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அவை தொடர்பான விபரங்கள் வாக்களிப்பு அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை, கரவெட்டி, கோப்பாய், சண்டிலிப்பாய் பிரதேச செயக பிரிவுகளின் கீழ் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் வாக்களிப்பதற்கான இலவசமான விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுதவித 8 ஆயிரதம் பேர் தேர்தல் கடமைகளுக்கான அமர்த்தப்பட்டுள்ளனர். வாக்களிப்பு நிலையங்கள் மற்றுமு; வாக்கென்னும் நிலையங்களுக்கான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

16 ஆம் திகதி காலை சிரேஸ்ர தலமைதாங்கும் அலுவலகர்களுக்கான பிடிவங்களும், ஆவணங்களும் கையளிக்கப்படும். அன்றிலிருந்து அவர்களுடைய கண்காணிப்பில் அந்தந்த வாக்களிப்பு நிலையங்கள் இருக்கும். வாக்கென்னும் நிலையமாக யாழ்.மத்திய கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதனைச் சுற்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வதற்காகவும், வாக்குப் பொட்டிகள் வாக்கென்னும் நிலையங்களுக்கு எடுத்துவருவதற்கான இ.போ.ச மற்றும் தனியார் பஸ் வண்டிகளை போக்குவரத்து மற்றும் பாதுகாக்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பொது மக்களுடைய வழமையான போக்குவரத்தில் எந்த குழப்பமும் ஏற்படாது. வழமையான போக்குவரத்துக்கள் நடைபெறும்.
மேலும் நெடுந்தீவு, எழுவைதீவு, நயீனாதீவு, அனலைதீவு போன்ற தீவுகளுக்கான வாக்குப் பெட்டிகள் கடற்படையினருடை உதவியுடன் அனுப்பிவைக்கப்படும். மீண்டும் நெடுந்தீவில் இருந்து வாக்களித்த வாக்குப் பெட்டிகள் மட்டும் உலங்கு வானூர்தி மூலம் வாக்கென்னும் நிலையங்களுக்கு எடுத்துவரப்படும்.

சில கட்சிகள் வாக்களிப்பதை தாங்கள் அவதானிப்போம் என்று விசம பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றார்கள். ஆனாலும் ஒவ்வொருவரும் வாக்களிப்பது மிக இரகசியமாகவே இருக்கும். வேறு எவரும் அதை பார்க்க முடியாது. எனவே மக்கள் அச்சம் கொள்ளாமல் 17 ஆம் திகதி காலை 7 மணியிலிருந்து மாலை 4 மணிவரைக்கும் வாக்களிக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments