Latest News

August 29, 2015

தனி ஒருவன் திரைவிமர்சனம்!
by Unknown - 0

தமிழ் சினிமாவிற்கு என சில வெற்றிக்கூட்டணிகள் இருப்பார்கள். அவர்கள் இணைந்தாலே சக்சஸ் தான். அப்படி ஒரு சக்சஸ் கூட்டணி தான் ஜெயம் ரவி மற்றும் அவருடைய அண்ணன் ராஜா. இதுநாள் வரை ரீமேக் படங்கள் மட்டும் எடுத்து வந்த ராஜா முதன் முறையாக தன் சொந்த சரக்கை தனி ஒருவனாக இறக்கியுள்ளார். மேலும், எப்போதெல்லாம் தன் தம்பிக்கு வெற்றி தேவையோ, அந்த நேரம் ராஜா தான் அவர் கண்முன் நிற்பார். இவர்கள் கூட்டணியில் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகு தனி ஒருவன் இன்று திரைக்கு வந்துள்ளது.

கதைக்களம்

நல்லவன் -கெட்டவன் இது தான் எப்போதும் தமிழ் சினிமாவிற்கான பார்முலா. இதில் கெட்டவனை அடித்து நல்லவன் கிளைமேக்ஸில் வெற்றி பெறுவது தான் எழுதப்படாத முடிவு.

இந்த பழைய கதைக்களத்தை இன்றைய ட்ரண்டிற்கு ஜெயம் ரவி-அரவிந்த் சாமியை புகுத்தி ராஜா ருத்ரதாண்டவர் ஆடியிருக்கிறார். சிறு வயதிலேயே கிரிமினல் மைண்டில் இருக்கு அரவிந்த் சாமி, ஏழையாக பிறப்பது தவறு, ஆனால், ஏழையாக இறப்பது தான் தவறு என்ற குறிக்கோளில் அரவிந்த் சாமி இந்த சமூகத்தில் பெரும் புள்ளியாக வளர்கிறார்.அப்படியே அவருக்கு மாறாக நேர்மை, கடமை என ஐபிஎஸ் அதிகாரியாக ஜெயம் ரவி, சிறுசிறு குற்றத்தை கூட தேடி தேடி அழைந்து துப்பாக்கி விஜய் ஸ்டைலில் ஒரு பெரிய குற்றத்தை கண்டிப்பிடிக்கின்றார்.

இந்த குற்றங்களுக்கு எல்லாம் மூலக்காரணம் அரவிந்த் சாமி என தெரிந்து அதன் பின் இவர்களுக்குள் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் தனி ஒருவன்.

படத்தை பற்றிய அலசல்

ஜெயம் ரவிக்கு பேராண்மைக்கு பிறகு ஒரு சிறந்த படம் என்றால் மிகையல்ல, ஒவ்வொரு காட்சிகளிலும் சிக்ஸர் அடிக்கின்றார். அவருடன் வரும் நண்பர்கள் கணேஷ் வெங்கட் ராம் மற்றும் சிலரும் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள்.நயன்தாரா, ஜெயம் ரவியை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாபாத்திரம், பிறகு அவர் சோர்ந்து இருக்கும் இடத்தில் ‘உன்னால முடியும் பாஸ்கர்’ கதாபாத்திரமாக மாறி முறுக்கேற்றுகிறார்.

படத்தின் வசனம் ஒவ்வொன்றும் சைக்காலஜி படித்தால் தான் புரியும் போல, ’நாமே எல்லோரும் பேப்பர்ல வணிக செய்திய தான் படிக்கிறதே இல்லை, ஆனால், அந்த பக்கத்தை வைத்து தான் மற்ற எல்லா பக்கங்களுக்கு செய்தியே கிடைக்கின்றது’ என பல இடங்களில் ‘அட’ என்று சொல்ல வைக்கின்றது.இவை அனைத்திற்கு மேல் அரவிந்த் சாமி...ரியல் கம் பேக் என்று சொல்லலாம், அடுத்த வருடம் நெகட்டிவ் கதாபாத்திரத்திற்கு விருதில் இவர் பெயரை எழுதிவிடலாம்.

க்ளாப்ஸ்

ஜெயம் ரவி- அரவிந்த் சாமி டாம்&ஜெர்ரி சண்டை, ஹிப் ஹாப் தமிழனின் பின்னணி இசை, விறுவிறுப்பான கிளைமேக்ஸ் காட்சிகள் அனைத்திற்கும் மேல் திரைக்கதை. தம்பி ராமையாவின் ஒன் லைன் காமெடி ரசிக்க வைக்கின்றது. ராம்ஜி ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் மிக துல்லியமாக படம்பிடித்து அழகாக காட்டியுள்ளது.

பல்ப்ஸ்

பாடல்கள் நன்றாக இருந்தாலும் சேஸிங்கில் இருக்கும் போது கடைசி டூயட் தேவையா? சில லாஜிக் மீறல்கள் மற்றப்படி வேறு ஒன்றும் இல்லை.

மொத்தத்தில் ஜெயம் ரவி தனி ஒருவனாக வந்தாலே கலக்குவார், இதில் அண்ணனுடன் என்றால் செஞ்சுரி தான்.
« PREV
NEXT »

No comments