Latest News

August 22, 2015

ஜனாதிபதி ஆணைக்குழு நம்பிக்கை இல்லை சர்வதேச விசாரணையே தேவை என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது
by admin - 0

ஜனாதிபதி ஆணைக்குழு நம்பிக்கை இல்லை சர்வதேச விசாரணையே தேவை என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது 

ஊடக அறிக்கை 

அன்பார்ந்த நன்பர்களே மற்றும் காணமல் ஆக்கபட்டவர்களின் உறவுகளே கடந்த பல வருடங்களாக காணமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் காணமல்  ஆக்கப்பட்டவர்களின் விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்பதனை பல தடவைகள் விசாரணை ஆணைக்குழு வடகிழக்கு பகுதிகளில் வருகை தந்தபோது பெரும்பாலான மக்கள் விசாரணையை புறக்கணித்து உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்பதுடன் சர்வதேச விசாரணையே தேவை என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

கடந்த 17.08.2015 தேர்தலுக்கு முன்னர் நாம் திருகோணமலையில் ஆணைக்குழுவின் அமர்வுகளை புறக்கணித்திருந்த நிலையில் தேர்தல் முடிவடைந்து ஒரு வார காலம் நிறைவு பெறாத நிலையில் நாளை (22.08.2015)ஜனாதிபதி  ஆணைக்குழுவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் விசாரனைகளை மேற்கொள்ளவுள்ளது .

எனவே மேற்படி விசாரணையானது தேர்தல் நடைபெற்று ஒரு வார களம் நிறைவடையாத நிலையில் மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டங்கள் ஈடுபடமுடியாத நிலையில் நாம் வழமைபோல் கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொள்ளமுடியாத நிலையில் உள்ளோம் .

எனவே உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதனை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அணைக்குழு மு சென்று விசாரணைகளை மேற்கொள்ளவேண்டாம் என்பதனை தெரியப்படுத்திகொள்ளும் அதேவேளை அனைவரும் வீடுகளில்  இருந்து
தங்களது எதிர்ப்பினை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மக்களை அன்பாக கேட்டுகொள்கிறோம் 

நன்றி 

அருட்தந்தை ஜெயபாலன் கருஸ்.
வட கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு 
மன்னார்  




என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 
« PREV
NEXT »

No comments