Latest News

August 01, 2015

ஐ.நாவின் சதி அம்பலம்-மே பதினேழு இயக்கம்
by Unknown - 0

சர்வதேச விசாரணை முறையை தவிர்த்து விட்டு , இலங்கை அரசாங்கமே தன்னைத் தானே விசாரித்துக்கொள்ளும் ‘உள்நாட்டு விசாரணை’யை நடைமுறைப்படுத்த ஐ.நாவின் தலைமைச் செயலகம் சதி செய்வது அம்பலமாகி இருக்கிறது.

இந்த சதியை இலங்கை அரசும்-ஐ.நாவும் இணைந்து செய்வதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இந்த விசாரணை முறைக்கு இலங்கை அரசும், அதன் வெளியுறவுத்துறையும் முன்னெடுக்கும் என்றும், ஐ.நா. வெளியில் இருந்து தேவைப்படும் உதவிகளை செய்யும் என்றும், வடக்கு மாகாணம் இதை நடைமுறைப்படுத்த பங்கு பெறும் என்றும் சேனல்4 தொலைக்காட்சியால் செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஒரு ஐ.நா அதிகாரி வடக்குமாகாண முதல்வரை மிரட்டி இருப்பதாக தெரிவித்திருக்கிறார் விக்னேசுவரன் . மேலும், இத்திட்டத்தினை வடக்குமாகாணத்திடம் ஒப்புதல் பெறாமலேயே தயாரித்திருப்பதாக சொல்கிறார். இந்த அயோக்கியத்தனத்தை புறக்கணிக்கப்போவதாக வலியுறுத்தி இருக்கிறார்.

இலங்கை மீதான அறிக்கையை தாமதப்படுத்துகிறது ஐ.நா. அதே சமயம் குற்றத்தில் ஈடுபட்ட ஜகத் டயஸ் இலங்கையின் படைகளின் தளபதியாக நியமிக்கபட்டதை ஐ.நாவின் தலைவர் பான் - கி மூனும், அமெரிக்காவின் ஜான் கெர்ரி என்ன சொல்கிறார்கள் என இன்னர்சிட்டி பத்திரிக்கை கேள்வி எழுப்பியது. சமீப காலங்களில் பான் - கிமூனும், ஜான் கெர்ரியும் இலங்கையை பாராட்டிக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று என்று இக்கேள்வியை எழுப்பி இருக்கிறது.

அன்பான தமிழர்களே, நம் கண்முன் இனப்படுகொலை விசாரனை என்கிற பெயரில் ஐ.நா-அமெரிக்காவினால் அரங்கேற்றப்பட்ட நாடகம் நம் மக்களுக்கான நீதியை தட்டிப்பறித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் முன் வைக்கும் அநீதியை ஏற்றுக்கொள்ளச் சொல்லி ஈழத்தமிழர் தலைவர்களை, அதிகாரிகளை மிரட்டிக்கொண்டிருக்கிறது.

2009இல் ஏமாந்தோம், அமைதி காத்தோம். இனிமேலும் இப்படியே இருக்கப்போகிறோமா?..

ஐ.நாவின் அயோக்கியத்தனத்தை எதிர்த்து குரல்கொடுக்க திரள்வது காலத்தின் கட்டாயம். எத்தனைக்காலம் தான் நாம் அநீதியை சகித்துக்கொள்வது. மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுப்போம்.

நீங்கள் எந்த இயக்கமாக, கட்சியாக இருந்தாலும் இப்பிரச்சனையில் ஒன்றாவோம். எதிரிகள் பலம் வாய்ந்தவர்கள், நேர்மையற்றவர்கள், கொடூர பின்னனியை கொண்டவர்கள். தமிழர்களின் அரசியல் வலிமையை காட்ட ஒன்றாவோம்.

-மே பதினேழு இயக்கம்.
« PREV
NEXT »

No comments