Latest News

August 12, 2015

சிங்கள அரசும் தெற்கும் ஒன்றுபட்ட நாட்டுக்குள் தமிழர்களின் சுய அதிகாரத்தை பகிர மறுத்தால் தமிழர்கள் மீண்டும் தனிநாட்டுக் கோரிக்கைக்கு செல்வது தவிர்க்க முடியாதது.
by admin - 0

Tamileelam
வடகிழக்கில் பிரிந்து செல்லுவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் கொதிநிலையில் உள்ள இலங்கை இனச்சிக்கலின் நிலை தெளிவாக புலப்படும். தமிழ் மக்களை தொடர்ந்தும் பிரிந்து செல்லும் நிலைக்கே இலங்கை அரசு தள்ளுகிறது.

தமிழர்களை தொடர்ந்தும் இரண்டாம்தரப் பிரஜைகளாகவே வாழ வைக்கும் தமது இனத்தால் ஆளப்படும் அதிகாரத்தின் கீழ் அடிமைப்படுத் தும் உரிமையை மறுக்கும் பேரினவாதப் போக்கு இன்னமும் மாறவில்லை என்பதும் அது மிகப் பலம் கொண்டு இருக்கிறது என்பதும் பெரும் துயரம் தரும் செய்தி மாத்திரமின்றி ஈழத் தமிழ் இனத்தின் இருப்பின் ஆபத்தை உணர்த்தும் செய்தியுமாகும். 

இன்னொரு இனத்தின் அதிகாரத்தை இன்னொரு இனத்தை ஆளும் இலங்கை வரலாறு மாறவேயில்லை. எனவே இந்த தேர்தலில் சிங்கள தேசத்திற்கு தக்க பதிலை வழங்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு. இன்றைய ஜனநாயக ஆயுதத்தின் மூலம் ஈழத் தமிழர் ஒற்றுமையை அபிலாசையை எடுத்துரைக்க வேண்டியுள்ளது.

நாட்டில் அதிகாரத்தை பகிர்ந்து தமிழ் மக்கள் சமத்துவமாக வாழ வழி செய்வதே இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்க உகந்த வழி என்பதே இலங்கையின் அறுபது வருட கால இனச் சிக்கலும் முப்பது வருட கால ஆயுதப் போராட்டமும் கற்றுத்தரும் பாடமாகும். இனப்படுகொலையால் காயப்பட்ட இனம் 60 வருடமாக ஒடுக்கு முறையால் பாதிக்கப்பட்ட இனம் தலை நிமிர்ந்து வாழ சுய மரியாதையுடன் சுய உரிமையுடன் வாழவே விரும்புகிறது. 

சிங்கள அரசும் தெற்கும் ஒன்றுபட்ட நாட்டுக்குள் தமிழர்களின் சுய அதிகாரத்தை பகிர மறுத்தால் தமிழர்கள் மீண்டும் தனிநாட்டுக் கோரிக்கைக்கு செல்வது தவிர்க்க முடியாதது.  
« PREV
NEXT »

No comments