Latest News

August 03, 2015

சுமந்திரனை வெல்ல வைக்க பலியாடாக்கப்படுகின்றேன்! கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் மதினி நெல்சன்!!
by admin - 0


பெண்கள் மீதான வன்முறைகள் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.அத்தகைய சம்பவங்களினில் பின்னணியினில் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் இருந்தால் கட்சி தலைமை தயவுதாட்சணியமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் மதினி நெல்சன்.

யாழ்ப்பாணத்தினில் களம் குதித்துள்ள அவர் இன்று யாழ்.நகரினில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டினில் ஊடகவியலாளர்களது கேள்விகளிற்கு பதிலளித்தார்.

பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் துஸ்பிரயோகங்களிற்கு எதிராக நான் பெண்கள் அமைப்புக்களுடன் இணைந்து போராட்டங்களை நடத்தியுள்ளேன்.அவ்வகையினில் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற மட்டங்களிலும் சரி ஏனைய மட்டங்களிலும் சரி மேற்கொள்ளப்படும் பெண்களிற்கு எதிரான வன்முறைகளை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேனென அவர் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் வேட்பாளரான சுமந்திரனை வெல்ல வைக்க தாங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகின்றதே என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் பொது அரங்கினில் இது பற்றி பேசுவது சரியாவென தெரியாது.ஆனாலும் வடகிழக்கினில் கூட்டமைப்பினில் போட்டியிடும் பெண் வேட்பாளர் என்ற வகையினில் நாடாளுமன்றினில் பெண் விகிதாசாரத்தை பேணவேனும் கட்சி தலைமை என்னை வெற்றி பெற வைக்க பாடுபடவேண்டும்.ஆனால் அவ்வாறில்லை.

பருத்தித்துறையினில் நடந்த கூட்டமைப்பின் பிரச்சாரக்கூட்டத்தினில் விரும்பதாக சம்பவஙகள் நடந்தன.பருத்தித்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் எனனை அங்கு பேசவும் அனுமதிக்கவில்லை.நான் மேடையேறுகையினில் சிலர் முகத்தை திருப்பியவாறு  மேடையிலிருந்து இறங்கினார்கள்.நான் புறந்தள்ளப்பட்டேன்.

நான் ஒரு மாவீரனின் சகோதரி.இறுதி யுத்தம் வரை நின்றவள்.கொத்துக்குண்டுகளினையும் கொத்து கொத்தாக செத்துமடிந்த றவுகளையும் கண்டவளென தெரிவித்தார்.

கூட்டமைப்பினில் உள்ள நிலையினில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எதிர்கொண்டவை பற்றி புரிந்து கொள்கின்றேன்.அவரிற்கு இத்தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன்.அவரிற்காக பாடுபட்டிருப்பேன்.

வடமராட்சி மண் வீரம் மிக்க மண்.எனது வெற்றி வாய்ப்பு நிச்சயமானது.துரோகிகளை மக்கள் அடையாளம் காணுவரெனவும் மதினி நெல்சன் நம்பிக்கை வெளியிட்டார்.
« PREV
NEXT »

No comments