Latest News

July 01, 2015

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கத்தில் நடிகர் விஜய்
by admin - 0

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கத்தில் தமிழகத்தின் பிரபல் திரைநட்சத்திரம் நடிகர் விஜய்யும் இணைந்துள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவித்துள்ளன.

ருவிற்றர் சமூகவலைத்தளத்தின் ஊடாக விஜய் ரசிகர்கள் இதனை முன்னெடுத்திருந்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் தமிழகத்தில் வெளிவந்ததுள்ள செய்திக்குறிப்பு பின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு 



சென்னை: நடிகர் விஜய் என்னதான் வெளிப்படையாக எதனையுமே தெரிவிக்காமல் இருந்தாலும் அவ்வப்போது அவரை சுற்றிய சர்ச்சைகள் ரெக்கை கட்டி பறந்துவிடுகின்றன.. அதுவும் இலங்கை பிரச்சனையில் சொல்லவே வேண்டாம்.. தற்போது ராஜபக்சேவுக்கு எதிரான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையெழுத்தியக்கத்துக்கு ஆதரவாக நடிகர் விஜய்யை கோர்த்துவிட்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.


@Actor_Vijay என்ற பெயரிலான ட்விட்டர் அக்கவுண்ட்டில் “ரொம்ப மன வருத்தத்தோட தான் இந்த செய்திய இங்க பதிவு செய்கிறேன். . . ” என்ற தலைப்பில்  ட்வீட் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
அதில், www.tgte-icc.org இந்த இணைப்பை பயன்படுத்தி 10 லட்சத்தில் நீங்கள் ஒருவர் ஆகுங்க” என்ற இமேஜ் போடப்பட்டு அதில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கக் கூடிய ‘நாடு கடந்த தமிழீழ அரசின்’ லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது உருத்திரகுமாரனை பிரதமராக கொண்டு அமெரிக்காவில் இயங்கி வருகிறது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம். இதன் முயற்சியில்தான் இந்த கையெழுத்தியக்கம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதில் கையெழுத்திட்டு வருகின்றனர். இதில் இணைய வேண்டும் என்று @Actor_Vijay எனும் ட்விட்டர் அக்கவுண்ட் அழைப்பு விடுத்திருக்கிறது. நடிகர் விஜய்யின் ரசிகர்களால் உருவாக்கப்பட்டது @Actor_Vijay என்கிறது அக்கவுண்ட் முகப்பு பக்கம். நடிகர் விஜய்யின் அதிகாரப்பூர்வமான @actorvijay என்ற ட்விட்டர் பக்கத்தை தொடர்ந்து இது ரீ ட்வீட் செய்தும் வருகிறது. இப்படியான நிலையில் திடீரென இலங்கை பிரச்சனையில் விஜய்இணைந்திருப்பது  பரபரப்பை கிளப்பியுள்ளது.
இவ்வாறு தமிழகச் செய்தியிருக்க மறுபுறம் புலம்பெயர் ஈழத்து திரைநட்சத்திரங்களும் கையெழுத்து இயக்கத்திட ஒப்பமிட அழைப்பு விடுத்துள்ளனர்.

குறிப்பாக குறுப்படங்கள் ஊடாக பல்வேறு விருதுகளை புகலிட திரைவிழாக்களில் பெற்றிருந்த நட்சத்திர கலைஞர்கள் பல் இக்கோரிக்கையினை முன்வைத்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.



« PREV
NEXT »

No comments