Latest News

July 22, 2015

விடுவிக்கப்படுமென எதிர்பார்த்த பகுதி எல்லைகளை பலப்படுத்தும் படையினர் -தொடர்ந்து ஏமாற்றப்படும் வலி.வடக்கு மக்கள்
by admin - 0

விடுவிக்கப்படுமென எதிர்பார்த்த பகுதி
எல்லைகளை பலப்படுத்தும் படையினர்
-தொடர்ந்து ஏமாற்றப்படும் வலி.வடக்கு மக்கள்-

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது இடங்கள் சிறு அளவிலாவது விடுவிக்கப்படுமென மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கு மாறாக பாதுகாப்பு வலய எல்லைகளை மேலும் பலப்படுத்தும் பணியில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டள்ளனர்.

இந்நிலையில் விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள 27 ஏக்கர் நிலப்பரப்பு கூட விடுவிக்கப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

விடுவிக்கப்படுமெனக் கூறப்பட்ட பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் விலகிச் செல்பதற்குப் பதிலாக அங்கு வேலிகளை மேலும் பலப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது.
இராணுவத்தினருடைய இச்செயற்பாடு மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினை கொடுத்துள்ளது. 

யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வருகைதந்திருந்த பிரதமர், பாதுகாப்பு அமைச்சு, மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர்கள், பலாலி இராணுவத்தலமையகத்தில் வலி.வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.

இக் கலந்துரையாடலில் உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள மேலும் சில பகுதிகளை விடுவிக்குமாறு யாழ்.அரச அதிகாரிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

 இவ்வாறான பல கோரிக்கைகளை உடனடியாகவே பாடைத் தரப்பினர் நிராகரித்துவிட்டனர்.
எனினும் செமன்றி வீதியுடன் கூடிய 27 ஏக்கர் நிலப்பரப்பினை விடுவித்து தெல்லிப்பழை – அச்சுவேலி பாதையூடான போக்கவரத்தினை ஆரம்பிக்க அனுமதிப்பதாக இணக்கம் தெரிவித்திருந்தனர். 

ஆனாலும் வசாவிளான் வடமுனை தேவாலையத்தில் இருந்து சிஸ்ரர் மட வீதியுடன் இணைக்கும் செமன்றி வீதி காணப்படும் உயர்பாதுகாப்பு வலைய எல்லைகளை இராணுவத்தினர் தற்போதும் பலப்படுத்தி வருகின்றனர்.

மரக் குற்றிகளைக் கொண்டு அமைக்கப்பட்டடிருந்த பாதுகாப்பு வலய எல்லைபகளை நீக்கி கொங்கிரீட் தூண்களை அமைத்து எல்லை மேலும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
உயர்பாதுகாப்பு வலைய எல்லையினை பலப்படுத்தும் இராணுவத்தினருடைய இச் செற்பாடானது செமன்றி வீதியுடன் இணைத்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட 27 ஏக்கர் மக்களிடம் கையளிக்கப்படுவது தொடர்பில் மிகுந்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
« PREV
NEXT »

No comments