Latest News

July 26, 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தல் - திஸ்ஸ அத்தநாயக்க!
by Unknown - 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டின் இறைமைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக ஐக்கிய பிரஜைகள் முன்னணியின் தலைவர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார்.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் யுத்த வெற்றிக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைக்க வேண்டுமெனவும், சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த 2012 முதல் 2014ம் ஆண்டு வரையில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் அமுல்படுத்த வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டமொன்றை அமுல்படுத்த வேண்டுமென கோரியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் இறைமை பற்றி பேசி வரும் சம்பிக்க ரணவக்க, அதுரலிய ரதன தேரர் ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்த தங்களது கருத்துக்களை வெளியிட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

« PREV
NEXT »

No comments