Latest News

July 23, 2015

இரத்தம் தோய்ந்த சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் ஈழத் தமிழர் தேசம் ஒருபோதும் இணைந்து வாழ முடியாது!
by admin - 0

இலங்கைத் தீவு இரு தேசங்கள் கொண்டதென்பதை சிறீலங்கா அரசாங்கம் உணர்ந்ததும், தமிழீழத் தனி அரசே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு என்பதனை தமிழ் மக்கள் தமது ஆன்மாவில் உரம் ஏற்றிக் கொண்டதுமான நாள் யூலை 23 ஆகும். தமிழீழ மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசாங்கம் 1983ம் ஆண்டு மேற்கொண்ட யூலை இன அழிப்புப்போர் நடைபெற்று இந்த வருடத்துடன் 32 ஆண்டுகள் . ஓடிவிட்டன.

சிங்களத்தால் திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட கறுப்பு யூலை தமிழினப்படுகொலை என்பது இரு இனங்களுக்கிடையே நடந்த ஒரு கலவரம் அல்ல. அது ஒரு இனத்தின் மீது இன்னொரு இனத்தின் அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப் படுகொலையாகும்.

1983 கறுப்பு யூலை இனப்படுகொலை ஈழத்தமிழர்களுக்கு ஒரு செய்தியைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இரத்தம் தோய்ந்த சிங்கள பௌத்த இன மேலாதிக்க அரசிடமிருந்து பிரிந்து சென்று சுதந்திர அரசை அமையுங்கள் என்பதுதான் அந்தச் செய்தி.

குறிப்பாக நேரடி இனப்படுகொலை என்ற வகையில் 1956ஆம் ஆண்டு யூன் மாதம் 5ஆம் தேதி கல்லோயாவில் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட 156 தமிழ் விவசாயக் குடும்பத்தினர் போலீசாரின் அனுசரணையுடன் சிங்களக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டது தொடங்கி 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் 145,000 அப்பாவி ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக சிங்கள இராணுவத்தினரால் விமான குண்டுவீச்சுகள், எறிகணை வீச்சுகள் உட்பட கனரக ஆயுதங்கள் மூலம் இனப்படுகொலை செய்யப்பட்டது வரை இதன் தொடர் இனப்படுகொலைகளைப் பட்டியலிடலாம்.

ஆதலால் 1983 கறுப்பு யூலை இனப்படுகொலையின் தொடாச்;சியும் வளர்ச்சியும் அதன் முக்கிய கட்டமுமே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாகும். கறுப்பு யூலை இனப்படுகொலையிலிருந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைப் பிரித்தோ, தனிமைப்படுத்தியோ பார்க்கமுடியாது. இனப்படுகொலைக்குள்ளாகியுள்ள தமிழீழ மக்கள் பாதுகாப்பாகவும், கௌரவமாகவும் வாழ்வதற்கு தமிழீழத் தனியரசினை அமைப்பது மட்டும் ஒரேவழி என்ற உறுதியினை இக் கறுப்பு யூலை நினைவு நாட்கள் நமக்கு வழங்கட்டும்.
அதே மனஉறுதியோடு இந்நாளில் எமது தனிப்பெரும் பொறுப்பினைச் செயற்படுத்தும் முயற்சிக்காக எம்மை அர்ப்பணிப்போமாக, தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்


டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் – டென்மார்க்

« PREV
NEXT »

No comments