Latest News

July 28, 2015

இலங்கையில் வன்முறைகள் தணியவில்லை – யாஸ்மின்
by Unknown - 0

யுத்தம் முடிவுற்று ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், சித்திரவதைகள், பெண்களுக்கெதிரான வன்முறைகள், சட்டவிரோதமாக தடுத்துவைத்தல், கொலைகள் ஊடாக இலங்கைத் தமிழர்கள் இன்னமும் இலங்கை அதிகாரிகளினால் திட்டமிட்ட வகையில் துன்புறுத்தப்பட்டு வருவதாக உண்மை, நீதி ஆகியவற்றைப் பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

சித்திரவதை, பாலியல் வன்முறை ஆகியனவற்றை இலங்கை அரசாங்கம் மற்றும் உயர்மட்டப் பாதுகாப்புத் தரப்பினர் கொள்கைரீதியாக கடைபிடித்து வருவதாக, சட்ட நிபுணர் யாஸ்மின் சூகா உட்பட்ட 155 நிபுணர்கள் குழுவொன்று தயாரித்துள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்திரவதை மற்றும் தடுப்பு முகாம்கள் என 41 இடங்கள் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ளன.

போர்க் காலத்தில் மட்டுமல்லாது, 2015ல் புதிய அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்ட பின்னரும் பாதுகாப்புத் தரப்பினர் இந்த முகாம்களைப் பயன்படுத்தி வருவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிடின் பாதிக்கப்படும் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் சர்வதேச சமூகம் தோல்வி காணும் எனவும் அந்த அறிக்கையில் குறுிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, இந்த அறிக்கையை சர்வதேச குற்றவியல் விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஐ.நா. பாதுகாப்புச் சபையிடம் குறித்த அமைப்பு கோரியுள்ளது.
« PREV
NEXT »

No comments