Latest News

July 01, 2015

வல்வெட்டித்துறை நெற்கொழு அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது
by admin - 0

வடமராட்சி கரவெட்டி ஞானம்ஸ்  விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்திவரும் அணிக்கு 8 ஒவர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இன்று ஞானம்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் பருத்தித்துறை ரொக்கெட் அணியை வெற்றிபெற்று வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகு அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. 



இப்போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய கழுகு அணி 7.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 46 ஒட்டங்களை பெற்றது இதில் செந்தூரன்18 பவன்10 ஒட்டங்களை பெற்றனர் ரொட்கெட்அணி சார்பாக பிரதீப் 3 கஜேந்தி 2 விக்கெட்களை விழ்த்தினர் பதிலுக்கு ஆடிய ரொக்கெட் அணி 6 ஒவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 23 ஒட்டங்களை பெற்றது இதில் பிரதீபன் 9 கஜன் 6 ஒட்டங்களைபெற்றனர். கழுகு அணியின் பந்து வீச்சின் சார்பில் செந்தூரன் 4 பவன் 2 விக்கெட்களை வீழ்த்தினர் இறுதியில்24 ஒட்டங்களினால் நெற்கொழு கழுகு வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
« PREV
NEXT »

No comments