Latest News

July 25, 2015

பிரித்தானியாவில் நடைபெற்று வருகின்ற புங்குடுதீவு நலன் புரிச்சங்கம் நடாத்துகின்ற விளையாட்டுப் போட்டி!
by Unknown - 0

இன்று (25.07.2015) சனிக்கிழமை பி.ப 1.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணி வரை பிரித்தானியாவில் உள்ள Roger Bannister centre Everyone, Active, Uxbridge road, Harrow, Middlesex, HA3 6SW என்ற இடத்தில்  நடைபெற்று வரும் பிரித்தானியா வாழ் புங்குடுதீவு மக்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்.

இந்நிகழ்வில் பிரித்தானியா வாழ் புங்குடுதீவு மக்கள் தமது குடும்ப சகிதம் உற்றார் உறவினர்களுடன் கலந்து கொண்டு மிக்க மகிழ்வுடன் சிறப்பித்து வருகின்றனர்.

மேற்படி நிகழ்வில் பல நிகழ்வுகளும், விளையாட்டுப் போட்டிகளும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிகழ்வில்... போட்டிகளின் விபரங்கள் பின்வருமாறு..

■ சிறுவர் / சிறுமிகள் 50 மீட்டர் ஓட்டம் (8 வயதிற்கு கீழ் பட்டோர்) 

■ சிறுவர் / சிறுமிகள் 100 மீட்டர் ஓட்டம் (9 -12 வயதிற்கு உட்பட்டோர்) 

■ இளைஞர்களுக்கான / யுவதிகளுக்கான 200 மீட்டர் ஓட்டம். 

■ கயிறு இழுத்தல் போட்டி - திருமணமான ஆண்கள் எதிர் திருமணமாகாத இளைஞர்கள். 

மற்றும்...

திருமணமான பெண்கள் எதிர் திருமணமாகாத பெண்கள். 

■ மேலும் ரவுண்டர்ஸ் 

மற்றும்... 

■ உதை பந்தாட்டப் போட்டி 

இந்நிகழ்வின் பொழுது தமது ஊரின் முக்கிய உணவுவகைகள் சிலவற்றைத் தயாரித்து மிகவும் மகிழ்வோடு தமது ஊரவர்களுக்கு விற்பனை செய்து வருவதையும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

உணவு வகைகளில் கூழ் பலரது விருப்ப உணவாக விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.! 










« PREV
NEXT »

No comments